Published on : 28 May 2020 17:54 pm

பேசும் படங்கள்... (28.05.2020)

Published on : 28 May 2020 17:54 pm

1 / 43

மீன்பிடித் தடைக்காலத்தில் கிடைத்த கடல் பரிசு: மீன்கள் இனப்பெருக்கத்துக்காக மத்திய - மாநில அரசுகள் மீன்பிடித் தடைக்காலத்தை அறிவித்துள்ளது. ஆனால், சிறிய வகை ஃபைபர் வகைப்[ படகுகளுக்கு மீன்பிடிக்க அனுமதியளிக்கப்பட்டுள்ளது. இன்று - புதுச்சேரி கடற்கரையோரத்தில் ஃபைபர் வகைப் படகில் மீன் பிடிக்கச் சென்ற மீனவரிடம் சிக்கிய 8 கிலோ எடையுள்ள தேங்காய் பாறை மீனை... சுத்தம் செய்கிறார் மீனவர் ஒருவர். புதுச்சேரி மீன் மார்க்கெட்டில் - இன்று (மே 28) கிலோ 550 ரூபாய்க்கு தே.பா.மீன் விற்கப்பட்டுள்ளது என்பது கூடுதல் செய்தி. தகவலும் படமும்: எம்.சாம்ராஜ்

2 / 43

நமக்கு ’கரோனா’ தொற்றினால் - மருத்துவமனைக்கு செல்வோம். மருத்துவப் பணியாளர்களுக்கு ’கரோனா’ வந்தால் மருத்துவமனையே பாதிப்புக்குள்ளாகிவிடும். விழுப்புரம், கடலுார், அதைச் சுற்றியுள்ள பகுதிகளில் வசிக்கும் மக்கள்... ’கரோனா’ தொற்றினால் பாதிக்கப்பட்டால்.. புதுச்சேரி மாநிலத்தில் உள்ள ஜிப்மர் மருத்துவமனையில்...சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று செல்கின்றனர். இந்நிலையில் - ஜிப்மர் மருத்துவமனை குடியிருப்பு வளாகத்தில் வசிக்கும் சுகாதாரப் பணியாளர் மற்றும் அவரது குடும்பத்தினர் 5 பேர் ’கரோனா’ தொற்று பாதிப்புக்குள்ளாகியுள்ளதாக கூறப்படுகிறது. இதன் காரணமாக - ஜிப்மர் மருத்துவமனைக்கு செல்லும் 3 பாதைகளில் உள்ள 2 தவுகள் இன்று மூடப்பட்டன. மருத்துவப் பணியாளர் மற்றும் அவரது குடும்பத்தினருக்கு ’கரோனா’ தொற்று உறுதி செய்யப்பட்டதை அடுத்து... அந்தப் பகுதியில் கரோனா பற்றிய அச்சம் இன்னும் அதிகரித்துள்ளது. படம்; எம்.சாம்ராஜ்

3 / 43

ஜூன் 1-ம் தேதி முதல் நடைமுறைக்கு வரும் மின் கட்டண உயர்வை ரத்து செய்யக் கோரி... இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (சிபிஐ) சார்பில் புதுச்சேரி மின்துறை அலுவலகம் முன்பு கண்டன ஆர்பாட்டம் நடைபெற்றது. படம்; எம்.சாம்ராஜ்

4 / 43

’’வட மாநிலத்தில் இருந்து வந்த எங்களுக்கு வேலை கொடுத்து... எங்களை வாழவைத்த உங்களுக்கு மிக்க நன்றி’’ எனக் கூறி ... தனது சொந்த மாநிலமான ஒடிசாவுக்கு ரயிலில் குடும்பத்தினருடன் திரும்பும் தொழிலாளி. படம்; எம்.சாம்ராஜ்

5 / 43

'கரோனா' நிவாரண தொகை வழங்கக் கோரி, வேலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்துக்கு மனு அளிக்க வந்த மண்பாண்டத் தொழிலாளர்கள். படம் : வி.எம்.மணிநாதன்

6 / 43

கரோனா தொற்று பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டு வரும்... கோவை மாநகர காவலர்களுக்கு ஆரோக்கிய குடிநீர் மற்றும் கிருமிநாசினி தொகுப்பை கோவை பீளமேடு காவல் நிலைய வளாகத்தில் மாநகர காவல் ஆணையர் சுமித்சரண் வழங்கினார். உடன் துணை ஆணையர்கள் பாலாஜி சரவணன், உமா, முத்தரசு செல்வகுமார் ஆகியோர். படம் : ஜெ .மனோகரன்

7 / 43
8 / 43

பராமரிப்பு என்ற பெயரில்...சிறுவாணி அணையில் தண்ணீர் வரத்துக் குழாய்களை அடைத்து... தமிழகத்துக்கு இடையூறு ஏற்படுத்தும் கேரள அரசை... கண்டித்து, கோவை காந்திபுரம் மதிமுக அலுவலகம் அருகே - கோவை மாநகர் மாவட்ட செயலாளர் ஆர் .ஆர். மோகன்குமார் தலைமையில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட மதிமுகவினர். படம்: ஜெ .மனோகரன்

9 / 43

ஊரடங்கு தளர்த்தப்பட்ட நிலையில் வெறிச்சோடி காணப்படும் கோவை காந்திபுரம் பேருந்து நிலையத்தில் உள்ள தற்காலி காய்கறி மார்க்கெட் பகுதி படம்; ஜெ .மனோகரன்

10 / 43
11 / 43

கோடை வெயிலில் குடிநீர் பற்றாக்குறையால் கோவை சித்திரைசாவடி சாலையில் உள்ள... சிறுவாணி நீர் செல்லும் குழாயில் இருந்து சொட்டும் நீரைப் பிடிக்கும் மூதாட்டி. படம்; ஜெ .மனோகரன்

12 / 43

’கரோனா’ விழிப்புணர்வு ஓவியங்கள்: ’கரோனா’ வைரஸ் தொற்றில் இருந்து பாதுகாத்துக் கொள்வது குறித்து... வேலூர் அண்ணா சாலையில் உள்ள ஏலகிரி அரங்க வளாக சுற்றுச் சுவர்களில்... சோட்டா பீம், மோட்டு பட்லு... போன்ற காட்டூன் தொடர்களில் வரும் கதாபாத்திரங்களைக் கொண்டு - முகக்கவசம் அணிவது, கைகளை சுத்தம் செய்வது, சமூக இடைவெளி விட்டு நிற்பது என... சிறியோர் முதல் பெரியோர் வரை அனைவரையும் கவரும் வகையில் ’கரோனா’ விழிப்புணர்வு கார்ட்டூன் ஓவியங்கள் வரையப்பட்டுள்ளன. தகவலும் படமும்: வி.எம்.மணிநாதன்

13 / 43
14 / 43
15 / 43
16 / 43

வெட்டிவேர் முகக்கவசம்: கரோனா தொற்றில் இருந்து தற்காத்துக் கொள்ள... காவல்துறையினருக்கு பாரம்பரிய, தமிழ் மருத்துவப்படி தயாரிக்கப்பட்ட ’வெட்டிவேர்’ முக்கவசத்தை வழங்குகிறார்... சென்னை மாநகர காவல்துறை ஆணையர் விஸ்வநாதன். படங்கள்: க.ஸ்ரீபரத்

17 / 43
18 / 43
19 / 43

சென்னை - பாரிமுனை பகுதியில் சாலையோரக் கடை வியாபாரிகளுக்கு... கரோனா தொற்று குறித்தும், பாதுகாப்பாக வியாபாரம் செய்யும் முறை குறித்தும்... விளக்கும் காவல்துறை அதிகாரி. படம்: க . ஸ்ரீபரத்

20 / 43

பாளையங்கோட்டை மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில்.... இன்று சூறைக் காற்றுடன் கூடிய மழை பெய்தது. நெடுநாட்களுக்குப் பிறகு சூறைக் காற்றுடன் மழை பெய்ததால்... பாளையம்கோட்டை கோட்டூர் சாலையில் பனைமரம் ஒன்று சூறைக் காற்றுக்குத் தாக்குப்பிடிக்காமல் கீழே சாய்ந்து விழுந்தது. படம்: மு.லெட்சுமி அருண்

21 / 43

தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதா வாழ்ந்த போயஸ் கார்டன் வேதா நிலையத்தை... தமிழக அரசு ’நினைவு இல்லம்’ ஆக மாற்றும் திட்டம் தொடர்பாக... நடைபெற்ற வழக்கில், நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பையடுத்து... எப்போதும் 5 காவலர்களுக்கும் குறையாமல் இருக்கும் அந்த இல்லத்தின் முன்பு... இன்று (மே - 28) ஒரே ஒரு காவலர் மட்டுமே இருந்தார். படம் : க.ஸ்ரீபரத்

22 / 43
23 / 43

வைகை தண்ணீரே வருக வருக: மதுரை - வைகை அணையில் இருந்து திறந்துவிடப்பட்ட தண்ணீர்... மதுரை யானைக்கல் பகுதியில் வைகை ஆற்றுக்கு வந்தடைந்தது. இந்தத் தண்ணீரை... ’வைகை நதி நீர் இயக்கம்’ சார்பாக... தீபாராதனை செய்து மலர்த்தூவி வரவேற்கப்பட்டது. படங்கள்: எஸ் .கிருஷ்ணமூர்த்தி

24 / 43
25 / 43

தடுப்பு சும்மா இருக்க நினைத்தாலும் காற்று விடுவதில்லை: திருநெல்வேலி வண்ணாரப்பேட்டைப் பகுதியில் பெருத்த சூறைக்காற்றுடன் இன்று (மே - 28) மழை பெய்தது. அதற்கு தாக்குப் பிடிக்காமல் கீழே சாய்ந்து கிடந்த போக்குவரத்து தடுப்புகள். படங்கள்: மு .லெட்சுமி அருண்

26 / 43

காற்றுக்கு ஏது வேலி: கடந்த சில நாட்களாக திருநெல்வேலி மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில்... வாட்டி வதைத்த ’கத்திரி’ வெயிலின் வெப்பத்தில்... பொதுமக்கள் அவதிப்பட்டு வந்த வேளையில், ஆகாயம் இன்று - சூறைக் காற்றோடு... இடியும் மின்னலுடன் கொட்டி தீர்த்தது மழையை . காற்றில் மரங்கள் மரண ஆட்டம் ஆடிய காட்சி இது. இடம் : பாளையங்கோட்டை. படங்கள்: மு. லெட்சுமி அருண்

27 / 43
28 / 43
29 / 43

மகாராஷ்டிரா டு மதுரை: தமிழ்நாட்டில் இருந்து மகாராஷ்டிராவுக்குச் சென்று பிழைத்து வந்த தமிழகத்தைச் சேர்ந்த தொழிலாளர்கள்... கரோனா தடுப்பு முன்னெச்சரிக்கைக்காக அமலில் இருக்கும் ஊரடங்கால் வாழ்வாதாரம் பாதித்ததால் தமிழகம் திரும்பினர். இந்நிலையில் - மகாராஷ்டிராவில் இருந்து சுமார் 1,400 பேர் சிறப்பு ரயில் மூலம் - இன்று மதுரை ரயில்வே ஸ்டேஷனில் வந்திறங்கினர். இவர்களில் பலர்... திருநெல்வேலி, சிவகங்கை, திண்டுக்கல், தேனி, மதுரை, விருதுநகரைச் சேர்ந்தவர்கள். படம்: எஸ்.கிருஷ்ணமூர்த்தி

30 / 43
31 / 43
32 / 43

திருநெல்வேலி - டவுனில் இன்று பலத்த சூறைக்காற்றுடன் கூடிய மழை பெய்ததால்... பொருட்காட்சி திடலில் செயல்பட்ட தற்காலிக காய்கறி மார்க்கெட்டின் கூறைகள் காற்றில் தூக்கி வீசப்பட்டன . அவற்றை - பரிதாபத்துடன் பார்த்துக்கொண்டிருக்கும் வியாபாரிகள். படங்கள்: மு .லெட்சுமி அருண்.

33 / 43
34 / 43
35 / 43

வேலூர் - அண்ணா சாலையில் உள்ள பர்மா பஜார் கடைகளை திறக்க அனுமதி வழங்கக் கோரி... மாவட்ட ஆட்சியர் அலுவலகத்துக்கு மனு அளிக்க வந்த வியாபாரிகள். படம்: வி.எம்.மணிநாதன்

36 / 43

வேலூரில் இன்று (மே 28) சுட்டெரித்த 106.9 டிகிரி வெயிலின் வெப்பச் சலனம் காரணமாக.. மால வேளையில் கருமேகங்கள் சூழ்ந்து பலத்த காற்றுடன் சிறிது நேரம் பெய்த மழை. படங்கள்: வி.எம்.மணிநாதன்

37 / 43
38 / 43
39 / 43
40 / 43

கவிழ்ந்து கிடக்கும் மண்பாண்டத் தொழில்: நாகரிக மயக்கத்தால் - நம் மூதாதையர்கள் காலாகாலமாகப் பயன்படுத்தி வந்த பல்வேறு நடவடிக்கைகளில் இருந்து... நாம் வெகு தூரத்துக்கும் மாறி வந்துவிட்டோம். அதற்கு வேகமெடுத்த விஞ்ஞான வளர்ச்சியும் ஒரு காரணம். இதில் ஒன்றுதான் - மண்பாண்டங்களும். இன்றைய நாளில் மண்பாண்டங்களை எவரும் பயன்படுத்துவதே இல்லை. இந்நிலையில் அழிவின் நிலையை நோக்கிச் செல்ல ஆரம்பித்துவிட்டது மண்பாண்டம் செய்யும் தொழில். ஆங்காங்கே கொஞ்சம் மிச்சமிருக்கும் மண்பாண்டத் தொழில்செய்யும் குயவர்கள்... ஊரடங்கு காரணமாக வாழ்வாதாரம் இழந்து தவிக்கின்றனர். வேலூரை அடுத்த பொய்கையைச் சேர்ந்த குயவர்கள் அரசு நிவாரணம் வழங்க கோரிக்கை வைக்கின்றனர். படம்: வி.எம்.மணிநாதன்

41 / 43
42 / 43
43 / 43

Recently Added

More From This Category