Published on : 18 Nov 2023 18:46 pm
உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியில் இந்தியா வெற்றி பெற வேண்டி மதுரை மேலமாசி வீதி, வடக்கு மாவட்ட சந்திப்பில் உள்ள நேரு ஆலய சுந்தர விநாயகர் கோவிலில் தேங்காய் உடைத்து சிறப்பு பிரார்த்தனை மதுரை ஜல்லிக்கட்டு ரோட்டரி சங்கம் சார்பாக நடைபெற்றது. | படங்கள்: எஸ்.கிருஷ்ணமூர்த்தி
மதுரை ஸ்மார்ட் சிட்டி கீழ் வைகை ஆற்றின் இருபுறமும் உள்ள செயல்படாத கரையோர பாதைகள் மற்றும் பெரியார் பேருந்து நிலையத்தில் கட்டப்பட்டு திறக்கப்படாமல் உள்ள கார் பார்க்கிங்கால் மாச வீதியைச் சுற்றி சாலையில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ள வாகனங்கள். | படங்கள்: எஸ்.கிருஷ்ணமூர்த்தி
கந்த சஷ்டி திருவிழாவை முன்னிட்டு மதுரை திருப்பரங்குன்றத்தில் திருக்கோவில் முன்பு சூரசம்ஹாரம் நிகழ்ச்சி நடைபெற்றது. | படங்கள்: எஸ். கிருஷ்ணமூர்த்தி
மதுரை மாநகராட்சி தமுக்கம் மாநாடு மையத்தில் பிரதம மந்திரி ஸ்வநிதி திட்டத்தின் கீழ் சாலையோர வியாபாரிகளுக்கு கடன் உதவிகளை மதுரை நாடாளுமன்ற உறுப்பினர் சு. வெங்கடேசன் வழங்கினார்.| படங்கள்: எஸ். கிருஷ்ணமூர்த்தி
கோவை மருதமலை சுப்பிரமணிய சுவாமி கோவிலில் கந்த சஷ்டி விழாவின் முக்கிய நிகழ்ச்சியான சூரசம்ஹாரம் நிகழ்ச்சி. | படங்கள்: ஜெ .மனோகரன்
பழனி தண்டாயுதபாணி சுவாமி மலை கோவிலில் நடைபெற்ற சூரசம்ஹாரம். படங்கள்: நா. தங்கரத்தினம்.
திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் சூரசம்ஹாரம் நிகழ்வு லட்சக்கணக்கான மக்கள் வெள்ளத்தில் நடந்தது. | படம்: ராஜேஷ்