மழை நாட்களில் வேலூர் மாநகராட்சி உட்பட பல்வேறு பகுதிகளில் இருந்து வெள்ளம்போல் ஓடும் மழைநீர், மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகில் உள்ள பிரதான கால்வாய் வழியாக சென்று பாலாற்றில் சேருகின்றன. இந்நிலையில், பிரதான கால்வாயில் தேங்கியுள்ள பிளாஸ்டிக் கழிவுகளை சம்பந்தப்பட்ட அதிகாரிகள் கவனித்து, அதனை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். | படம்: வி.எம்.மணிநாதன்