Published on : 02 Jun 2023 19:14 pm

கோவை மழை முதல் மதுரை கலைஞர் நூலகம் வரை | நம்ம ஊரு போட்டோ ஸ்டோரி @ ஜூன் 2, 2023

Published on : 02 Jun 2023 19:14 pm

1 / 23

மதுபாட்டில்களை திரும்பப் பெறும் திட்டத்தின் கீழ் கோவை பீளமேட்டில் உள்ள மதுக்கடை பாரில் சேகரிக்கப்பட்ட காலி மதுபாட்டில்களை தரம் பிரிக்கும் பணியில் ஈடுபட்டுள்ள தொழிலாளர்கள். | படம்: ஜெ.மனோகரன்

2 / 23

கோவை நகர பேருந்து நிலையத்தின் நுழைவுப் பகுதியில் சாக்கடையின் மூடி உடைந்து கம்பிகள் வெளியே தெரிகின்றன. பேருந்துகளின் டயர்களை கம்பிகள் பதம் பார்ப்பதால் ஓட்டுநர்கள் அவதியில் உள்ளனர். | படம்: ஜெ.மனோகரன்

3 / 23

மல்யுத்த வீராங்கனைகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த புகாரில் எம்.பி பிரிஜ் பூஷனை உடனடியாக கைது செய்யக் கோரியும், டெல்லி காவல் துறையைக் கண்டித்தும் மதுரை ரயில்வே நிலையம் முன்பாக எஸ்எஃப்ஐ, டிஒய்எப்ஐ இயக்கங்களின் சார்பாக முற்றுகை போராட்டம் நடைபெற்றது . | படம்: எஸ்.கிருஷ்ணமூர்த்தி

4 / 23

மதுரை எல்லிஸ் நகரில் வழியாக செல்லும் ஆகாய தாமரை செடிகளை அகற்றப்படாமல் இருக்கும் கிறித்துமால் நதி. | படம்: எஸ்.கிருஷ்ணமூர்த்தி

5 / 23

என்சிசி மாணவர் படையின் கடற்படை பிரிவு மாணவர்கள் புதுச்சேரியில் இருந்து காரைக்காலுக்கு பாய்மர படகில் கடல் சாகச பயணம் மேற்கொள்கின்றனர். 25 மாணவிகள் உள்பட 60 பேர் இந்த பயணத்தில் ஈடுபட்டுள்ளனர். இவர்களது சாகசப் பயண தொடக்க நிகழ்ச்சி தேங்காய்த்திட்டு மீன்பிடி துறைமுக வளாகத்தில் இன்று நடைபெற்றது. இதில் புதுவை முதல்வர் ரங்கசாமி கலந்துகொண்டு கடல் சாகச பயணத்தை கொடியசைத்து தொடங்கி வைத்தார்.

6 / 23

திருவிடைமருதூர் வட்டம், திருப்பனந்தாளில் வாக்கி டாக்கிகள் மூலம் தகவல் அளித்து, டாஸ்மாக் மதுபானம் விற்பனை செய்த 6 பேரை போலீஸார் கைது செய்து அவர்களிடமிருந்து 3 வாக்கி டாக்கிகள், 2 இரு சக்கர வாகனங்களைப் பறிமுதல் செய்துள்ளனர். | படம்: சி.எஸ்.ஆறுமுகம்

7 / 23

வைகாசி விசாகத்தை முன்னிட்டு முருகப் பெருமானுக்கு முதல் படை வீடான மதுரை திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோயிலுக்கு பக்தர்கள் பால்குடம், பரவக் காவடி ,வேல் குத்தி , சூரிய காவடி எடுத்து நேர்த்திக் கடன் செலுத்தினார்கள். | படங்கள்: எஸ்.கிருஷ்ணமூர்த்தி

8 / 23
9 / 23
10 / 23
11 / 23
12 / 23
13 / 23

கோவையில் இன்று பெய்த திடீர் கனமழை. | படங்கள்: ஜெ.மனோகரன்

14 / 23
15 / 23
16 / 23
17 / 23

தென்பகுதி மக்களுக்கு வரப்பிரசாதமாக அமைகிறது மதுரையில் ‘கலைஞர் நூற்றாண்டு நூலகம்’. இந்நூலகம் மதுரை - புதுநத்தம் சாலையில் ரூ.120.75 கோடியில் உலகத் தரத்துக்கு இணையாக கட்டப்பட்டுள்ளது. 2,13,338 சதுரடி பரப்பளவில் அமையபெற்றுள்ளது. இந்நூலகத்தில் சுமார் 2 லட்சத்திற்கு அதிகமான புத்தகங்கள் இடம்பெறுகின்றன. பல்வேறு துறை சார்ந்த புத்தகங்கள் வாங்க சுமார் ரூ.10 கோடி, தொழில்நுட்ப உபகரணங்களுக்கென ரூ.5 கோடி ஒதுக்கீடு செய்து, ஏற்கெனவே அரசாணை பிறபித்து, கொள்முதல் செய்யப்பட்டு வருகிறது. | படங்கள்: எஸ்.கிருஷ்ணமூர்த்தி

18 / 23

6 தளங்களை கொண்டுள்ள கலைஞர் நூற்றாண்டு நூலகத்தின் அடித்தளத்தில் (19314 சதுரடி ) வாகன நிறுத்துமிடம், செய்தி, நாளிதழ் சேமிப்பு, நூல் கட்டும் பிரிவு அமைக்கிறது. தரைத் தள பகுதியில் (32656) கலைக்கூடம், மாற்றுத்திறனாளி பிரிவு, மாநாட்டு கூடம், முக்கிய பிரமுகர்கள் அறை, சொந்த நூல்கள் படிக்கும் பிரிவு-1, பல்வகை பயன்பாட்டு அரங்கம், உறுப்பினர் சேர்க்கை பிரிவு, மின் கட்டுபாட்டு அறை, தபால் பிரிவுகள் அமைகின்றன.

19 / 23

முதல் தளத்தில் (29,655) கலைஞர் பிரிவு, குழந்தைகள் நிகழ்ச்சி அரங்கம்,பருவ இதழ்கள் மற்றும் நாளிதழ்கள் பிரிவு, குழந்தைகளுக்கான நூலகம், சொந்த நூல்கள் படிக்கும் பிரிவு-2, அறிவியல் உபகரணங்கள் பிரிவு அமைக்கிறது. 2-ம் தளத்தில் (29,655) தமிழ் நூல்கள்பிரிவு (குறிப்பு உதவி நூல்கள் பிரிவு) மற்றும் கலைஞரின் நினைவைப் போற்றும் வகையில் அவரது கவிதைகள், கட்டுரைகள், அரசியல், இலக்கியம், வரலாறு புத்தகங்கள், திரைப் படத்துறை தொடர்பான புத்தகங்கள் அடங்கிய தனிப்பிரிவுகளும் இடம் பெறுகின்றன.

20 / 23

3-வது தளத்தில் (29,655) ஆங்கில நூல்கள் , ஆராய்ச்சி இதழ்கள், தமிழ் நூல்கள் அடங்கிய பிரிவுகள் அமைக்கின்றன. 4-வது தளத்தில் (20,616) சுமார் 30 ஆயிரம் புத்தகங்கள் அடங்கிய போட்டித் தேர்வர்களுக்கான பல்வேறு துறை சார்ந்த நூல்கள் பிரிவு அமைக்கிறது. 5-ம் தளத்தில் (20,616) அரிய நூல்கள், மின் நூலகம், பல்லூடகம், நூல்கள் பாதுகாத்தல், ஒளி, ஒலி தொகுப்புகள், காட்சியகம், மின்னுருவாக்கம், பார்வையற்றோருக்கான மின் நூல், ஒலி நூல் ஸ்டுடியோ, நுண்பட அட்டை அறைகள் அமைக்கப்பட்டுள்ளன. 6-வது தளத்தில் (20,616) ஆங்கில நூல்கள் (நூல் இரவல் பிரிவு), நூல் பகுப்பாய்வு , நூல் பட்டியல் தயாரித்தல், நூலக நிர்வாகம், நூல்கள் கொள்முதல், பணியாளர்கள் உணவருந்தும் பிரிவுகளும் அமைகின்றன.

21 / 23

இந்நூலக கட்டுமான பிரிவு தலைமை பொறியாளர் உள்ளிட்ட அதிகாரிகள் கூறியது: "99 சதவீத கட்டுமான பணிகள் முடிந்த நிலையில், இந்நூலகத்தை விரைவில் பயன்பாட்டுக்கு கொண்டு வரும் பணி தீவிரமாக நடக்கிறது. கட்டிடத்தின் முழு வடிவிலான கட்டுமான பணி நூறு சதவீதம் செப்டம்பரில் முடிந்தது. மின் விளக்குகள், ஏசி மிஷின், 6 மாடிகளுக்கு செல்ல நகரும் படிக்கட்டுகள் அமைக்கும் பணிகளும் முடிந்தன” என்றார்.

22 / 23

மேலும், “கட்டிட நடுப்பகுதியில் சூரிய வெளிச்சம் கிடைக்கும் வகையில், கண்ணாடிப் பேழையிலான கூடாரம் அமைக்கப்பட்டுள்ளது. வெளிப்புற அலங்கார கட்டுமான பணிகளும் முடிந்து, ஜெர்மன் கண்ணாடிச்சுவர் பூச்சு பூசப்பட்டுள்ளது. அதில் கலைஞரின் உருவம் அமைக்கப்படுகிறது. முன்பகுதி யில், கலைஞரின் உருவச்சிலை மாடித்தோட்டத்துடன் நூல்களை படிக்கும் வசதி, கலைக்கூடமும் அமைக்கப்படுகிறது. உள் அலங்காரப் பணி தொடர்ந்து நடக்கின்றது” என்றார்.

23 / 23

ரூ.10 கோடி மதிப்பில் சுமார் ரூ. 2.50 லட்சம் புத்தகங்கள் கொள்முதல் செய்யப்பட்டுள்ளன. ரூ.16.7 கோடியில் மேஜை, நாற்காலி, புத்தகம் வைக்கும் அலமாரிகள், படிப்பதற்கு தேவையான மேஜைகள், பர்னிச்சர்களும் வாங்கப்படு கின்றன. ஏற்கனவே வாங்கிய நூல்கள் அதற்குரிய இடங்களில் அடுக்கி வைக்கும் பணிகளும் தொடர்ந்து நடக்கிறது. தற்போது, துறைகள் வாரியாக நூல்கள் அடுக்கி வைக்கும் பணிகளும் மும்மரமாக நடக்கின்றன. விரைவில் திறக்க ஏற்பாடுகளும் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.

Recently Added

More From This Category

x