Published on : 24 Jun 2025 18:27 pm
கொழுப்புச் சத்தைக் கட்டுப்பாட்டில் வைத்திருக்க, நாம் உட்கொள்ளும் உணவில் கவனம் செலுத்த வேண்டியது அவசியம் என்கின்றனர் ஊட்டச்சத்து நிபுணர்கள்.
ரத்தத்தில் உள்ள கொழுப்பைக் குறைக்க ‘ஆலிவ் எண்ணெய்’ உதவுவதாக ஆய்வுகள் கூறுகின்றன. சமையலுக்கு அளவாக ஆலிவ் எண்ணெய் பயன்படுத்தலாம்.
கொழுப்பின் அளவைக் குறைப்பதில் ‘வெங்காயம்’ முக்கியப் பங்கு வகிக்கிறது. சமைக்கப்பட்ட உணவில் பயன்படுத்தப்படும் வெங்காயமே நல்லது.
பீன்ஸ், பட்டாணி, கொண்டைக் கடலை, பருப்பு வகை போன்றவற்றில் ஏதேனும் ஒன்றை தினமும் உணவில் எடுத்துக்கொள்வதும் நல்லது.
மஞ்சளில் இருக்கும் வீக்கத்தைக் கட்டுப்படுத்தும் கர்குமின் (Curcumin) என்ற வேதிப்பொருள் ரத்தத்தில் இருக்கும் கொழுப்பைக் குறைக்க காரணமாக இருக்கிறது.
பாதாமில் இருக்கும் ஆரோக்கியமான கொழுப்பு, நார்ச்சத்து ஆகியவை கொழுப்பைக் குறைக்க உதவும்.
வெண்ணெய்யில் கொழுப்பில் கரையும் வைட்டமின்கள் இருப்பதால், ஆரோக்கியமான கொழுப்புச் சத்து கிடைக்க உதவுகிறது. அளவாக எடுத்துக்கொள்வது நல்லது.