Published on : 23 Jun 2025 19:41 pm
புழுக்கொல்லியாகவும், மாதவிடாய் காலத்தில் அதீத குருதிப் பெருக்கைக் கட்டுப்படுத்தும் திறன் கொண்டதாகவும் அன்னாசிப் பழம் இருப்பதாக சித்த மருத்துவம் சொல்கிறது.
வைட்டமின் – சி, மாங்கனீஸ், தையாமின், ஃபோலேட் என ஊட்டங்களைத் தன்னுள் எக்கச்சக்கமாய் கொண்டிருக்கிறது அன்னாசி.
அன்னாசியைத் தொடர்ந்து சாப்பிடுபவர்களுக்கு மூப்பின் காரணமாக உண்டாகும் கண்பார்வைக் குறைபாடு (Macular degeneration) தள்ளிப்போகும்.
அன்னாசி பழத்தில் உள்ள நார்ச்சத்தும் நீர்ச்சத்தும் மலத்தை எளிதாய்க் கடத்த உதவுகின்றன. அதாவது, மலச்சிக்கலுக்கு உகந்தது.
அதிகரித்த கொழுப்புச் சத்து உடையவர்கள், தங்கள் உணவு முறையில் அடிக்கடி சேர்க்க வேண்டிய பழம்தான் அன்னாசி.
அன்னாசியில் உள்ள ப்ரோமெலைன் (Bromelain) எனும் நொதி, புரதங்களை எளிதாகச் செரிமானமாக்க உதவுகிறது.
வாந்தி, வயிற்றுக்கடுப்பு, செரிமான தொந்தரவுகளுக்கு அன்னாசி பழரசத்தை லேசாகச் சூடாக்கிக் கொடுக்க சிறந்த நிவாரணம் கிடைக்கும்.
அன்னாசி பழத்தின் சாறோடு தேன் சேர்த்து மணப்பாகு ரகத்தில் தயாரித்துக் குடித்தால், வாந்தியும் அழல் சார்ந்த நோய்களும் பறந்து போகும்.