Published on : 23 Jun 2025 18:55 pm
மூளையின் செயல்பாடுகளுக்கும் எரிபொருள் தேவை. மூளையை கூர்மையாக்க ஊட்டச்சத்து நிறைந்த உணவை உட்கொள்வது அவசியம்.
வைட்டமின்-கே, துத்தநாகம், வைட்டமின்-சி உள்ளிட்ட பல ஊட்டச்சத்துக்கள் மூளைக்கு ஊட்டமளிக்கத் தேவைப்படும்.
ஊட்டச்சத்து நிறைந்த உணவுப் பொருட்களான மீன் எண்ணெய், புரோக்கோலி, கொட்டைப் பருப்புகள், பரங்கி விதைகள், காலிஃபிளவர் எடுத்துக் கொள்ளலாம்.
பழுப்பு அரிசி, முழுத் தானியங்கள், வெண்ணெய், முட்டை, முட்டைக் கோஸ், சோயா பொருட்கள் உள்ளிட்டவை மூளையின் செயல்பாட்டை கூட்ட உதவும்.
வயதாகும்போது மூளை சுறுசுறுப்பான செயல்பாட்டை இழக்கத் தொடங்குகிறது. பின்னர், நினைவாற்றல் இழப்பும் அறிதல் உணர்வும் குறையும்.
மூளையை ஆரோக்கியமாகவும் மகிழ்ச்சியாகவும் வைத்திருக்கச் சமச்சீர், ஆரோக்கியமான உணவைப் பராமரிப்பது அவசியம்!