Published on : 21 Jun 2025 19:00 pm
கர்ப்பக் காலத்தில் உடல், மன ரீதியான அழுத்தங்களை பெண்கள் எதிர்கொள்வர். பசியின்மை, சோர்வு, மன அழுத்தத்தால் சத்துள்ள உணவு உண்பது கடினம்.
மூன்று வேளை உணவுக்குப் பதிலாக ஆறு வேளை உணவு (மூன்று வேளை உணவு & மூன்று வேளை சிற்றுண்டி) எடுத்துக் கொள்ளலாம்.
ஒவ்வொரு 2–3 மணி நேரத்திற்கு ஒரு முறை குறைந்த அளவில் சாப்பிடலாம். வாசனை அதிகம் வராத, மிதமான சுவையுடன் கூடிய உணவு நல்லது.
நன்கு மென்று மெதுவாகச் சாப்பிட வேண்டும். இஞ்சி சேர்க்கப்பட்ட மூலிகை டீ அல்லது இஞ்சி கலந்த வெந்நீர் உதவியாக இருக்கலாம்.
அதிக மசாலா, எண்ணெய், சுவையூட்டிகள் கொண்ட உணவை தவிர்க்க வேண்டும். வறுத்த உணவுக்கு பதிலாக வேக வைத்த உணவு சாப்பிடலாம்.
சாப்பிட்ட பிறகு உடனடியாகப் படுக்காமல், குறைந்தது 30 நிமிடங்கள் நேராக உட்கார்ந்திருக்க வேண்டும். சுறுசுறுப்பாக இருக்க வேண்டும்.
நிறையத் தண்ணீர் அல்லது இளநீர், மோர், சூப் போன்ற திரவ உணவு வகைகளை அருந்த வேண்டும். டீ, காபி அதிகம் குடிக்க வேண்டாம்.
குமட்டலைத் தவிர்க்கப் பல் துலக்குதல், மவுத்வாஷ் பயன்படுத்துதல், புதினா இலை மெல்லுதல் ஆகியவற்றின் மூலம் புத்துணர் பெறலாம்.
வைட்டமின் ‘டி’யைப் பெற நாள்தோறும் 20 நிமிடங்கள் சூரிய ஒளியில் இருப்பது மிகவும் அவசியம்.
அதிக சர்க்கரை, அதிகக் கொழுப்பு, அதிக உப்பு நிறைந்த உணவு வகைகள் தவிர்க்கப்பட வேண்டும்.