Published on : 17 Jun 2025 14:59 pm

வாக்கிங், ஜாகிங்... - எது மிகவும் நல்லது?

Published on : 17 Jun 2025 14:59 pm

1 / 8

நடைப்பயிற்சி, மெல்லோட்டம் (Jogging) இந்த இரண்டும் சிறந்த உடற்பயிற்சி வகைகளே. உங்கள் தேவை, இலக்கு பொறுத்து ஒன்றைத் தேர்வு செய்யலாம்.

2 / 8

இதய நலன், எலும்பு வலிமை, எடை மேலாண்மை என ஒட்டுமொத்த ஆரோக்கியத்தை ‘வாக்கிங்’ மேம்படுத்துகிறது. இது எல்லா வயதினருக்கும் ஏற்றது.

3 / 8

ஜாகிங் உடன் ஒப்பிடும்போது ‘வாக்கிங்’ குறைந்த அளவில் கலோரிகள் எரிக்கப்படுகின்றன. இதுதான் நடைப்பயிற்சியின் குறைபாடு.

4 / 8

ஜாகிங்கில் அதிக கலோரிகள் எரிக்கப்படுவதால், உடல் எடை விரைவில் குறையும். இதய ஆற்றல் விரைவில் மேம்படும்.

5 / 8

ஜாகிங் மூலம் ரத்த அழுத்தம் நன்கு கட்டுப்படும். நீரிழிவுக் கட்டுப்பாட்டில் விரைவான முன்னேற்றத்தைக் காணலாம்.

6 / 8

ஆனால், ஜாகிங்கை முறைப்படி செய்யத் தவறினாலோ, அதிகமாக மேற்கொண்டாலோ முழங்கால் மூட்டில் குருத்தெலும்புத் தசைகள் சிதைவடையலாம்.

7 / 8

நீங்கள் உடற்பயிற்சியின் ஆரம்பக்கட்டத்தில் இருந்தால் சில மாதங்களுக்கு வாங்கிங் பயிற்சியும், அதைத் தொடர்ந்து ஜாகிங்கும் மேற்கொள்ளலாம்.

8 / 8

‘ஜாகிங்’கை மட்டுமே விரும்புவோர் ஒரு முழுமையான உடல் பரிசோதனைக்குப் பிறகு, மருத்துவர் ஆலோசனையுடன் ஜாகிங் மேற்கொள்ளலாம்.

Recently Added

More From This Category

x