Mobile using while lying down explained
Mobile using while lying down explained

படுத்துக்கொண்டே செல்போன் பார்க்கலாமா?

Updated on
2 min read

தொடர்ந்து பல மணி நேரம் செல்போனை பார்த்தால் கண்கள் சோர்வடையும்; வறண்டுவிடும்; தலைவலி, பார்வை பிரச்சினை வரும் என்பது மருத்துவர்களின் எச்சரிக்கை.

அரை மணி நேரத்துக்கு மேல் தொடர்ந்து செல்போனைப் பார்ப்பதைத் தவிர்க்க வேண்டும் என்பது மருத்துவர்களின் அறிவுறுத்தல். 
 

தொடர்ந்து செல்போனை பார்க்க வேண்டும் எனில், அடிக்கடி கண்களைச் சிமிட்ட வேண்டும். இதனால், கண்களில் ஈரம் படியும். இது கண் எரிச்சலை தடுக்கும். 

செல்போன் திரையில் வெளிச்சம் சரியான அளவில் இருக்க வேண்டியது அவசியம். திரை சுத்தமாகவும் இருக்க வேண்டும். 
 

கண்ணுக்கு மிக அருகில் செல்போனை வைத்துப் பார்க்கக் கூடாது; கண்ணுக்கும் திறன்பேசிக்கும் இடையே 40 செ.மீ. இடைவெளி இருக்க வேண்டும்.

படுத்துக்கொண்டே செல்போனை பார்ப்பதும், இருட்டில் செல்போனை பார்ப்பதும் தவறு என்பது மறுத்துவர்களின் மற்றொரு முக்கிய எச்சரிக்கை.
 

20 நிமிடத்துக்கு ஒரு முறை கண்களை விலக்கி, 20 அடி தூரத்திலுள்ள ஒரு பொருளை 20 விநாடிகளுக்குப் பார்த்தால் கண் பாதிப்பு அடைவதைத் தடுக்கலாம். 
 

செல்போனை அதிக நேரம் பார்ப்பவர்களுக்கு தலைவலி நீடித்தால் உடனடியாக கண் நல மருத்துவரைப் பார்ப்பது நல்லது.
 

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in