prevention methods for Fatty liver explained
prevention methods for Fatty liver explained

கொழுப்புக் கல்லீரல்: தடுப்பு வழிகள் என்னென்ன?

Updated on
2 min read

கல்லீரலில் கொழுப்புப் படிவதே ‘கொழுப்புக் கல்லீரல்’ (Fatty liver). கவனிக்காவிட்டால் ஆபத்தாகும் இந்த பாதிப்பை தடுக்கும் வழிகள்...
 

மது அருந்தும் பழக்கம் இருப்பின், அதை உடனடியாக கைவிட வேண்டும். உடல் எடையைச் சரியாகப் பேண வேண்டும்.

கொழுப்பு மிகுந்த உணவுகளான சிவப்பு இறைச்சி, துரித உணவுகள், பதப்படுத்தப்பட்ட உணவுகள் முதலியவற்றை குறைத்துக் கொள்வீர்.

நொறுக்குத் தீனி கூடாது. கீரைகள், பழங்கள், காய்கறிகளை தேவைக்கு எடுத்துக் கொள்ளுங்கள். ஒமேகா 3 சத்துள்ள மீன் உணவு நல்லது.

தினமும் ஓர் உடற்பயிற்சி அவசியம். மன அழுத்தம் ஏற்படாமல் பார்த்துக் கொள்ளுங்கள். இரவில் 6 - 8 மணி நேரம் தூக்கம் அவசியம்.

நீரிழிவை கட்டுப்படுத்துவீர். சர்க்கரை கட்டுக்குள் இல்லாவிட்டால் ‘முதல்கட்ட கொழுப்புக் கல்லீரல்’ (Grade I Fatty Liver)-ஐ தடுக்க முடியாது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in