tips for uric acid
tips for uric acid

யூரிக் அமிலம் அதிகரித்தால்... - சில அலர்ட் குறிப்புகள்

Updated on
2 min read

யூரிக் அமிலம் என்பது கல்லீரலில் உண்டாகிற ஒரு கழிவுப் பொருள்.  உணவு முறையால் ரத்தத்தில் யூரிக் அமிலம் அதிகரிப்பது அதிகமாகிக் கொண்டே போகிறது. 
 

சாதாரணமாக ஒரு டெசி லிட்டர் ரத்தத்தில் பெண்களுக்கு 6 மி.கி. வரை, ஆண்களுக்கு 8 மி.கி. வரை யூரிக் அமிலம் இருப்பது இயல்புநிலை. இது அதிகரித்தால் பிரச்சினை. 
 

யூரிக் அமிலம் சிறுநீரகத்துக்குச் சென்று சிறுநீரில் வெளியேறும்போது சிறுநீரகக் கற்களாக மாறுகிறது. அப்போது சிறுநீரகங்களைக் கடுமையாகப் பாதிக்கிறது.
 

மாரடைப்பு உள்ளிட்ட இதய நோய்கள் உள்ளவர்களுக்கு யூரிக் அமிலம் அதிகரிப்பது ஆபத்தானது. எனவே, இவர்களுக்கு கூடுதல் கவனம் தேவை. 
 

யூரிக் அமில பாதிப்பு பெரும்பாலும் ஆண்களுக்கே அதிகம் ஏற்படும். பெண்களுக்கு மாதவிடாய் நின்ற பிறகு இந்தப் பிரச்சினை ஆரம்பிக்கிறது. 
 

நீரிழிவு, சோரியாசிஸ், ரத்தத்தில் கொலஸ்டிரால் அதிகம் உள்ளவர்கள், மது அருந்துவோர் உடல் பருமன் உள்ளவர்களுக்கு இளம் வயதிலேயே இது பாதிக்கும். 

அசைவ உணவை அதிகம் சாப்பிடுவோர், இரு சக்கர வாகனங்களில் அதிக நேரம் அலைவோர், கடுமையாக உடற்பயிற்சி செய்வோருக்கும் இந்தப் பாதிப்பு ஏற்படலாம். 
 

சிறுதானிய உணவு, முழுதானிய உணவு, பழங்கள், காய்கறிகள் நிறைந்த உணவைச் சாப்பிட்டால், யூரிக் அமிலம் அதிகரிப்பதில்லை. 
 

பெரும்பாலும் கொழுப்பு அதிகமுள்ள அசைவ உணவிலும், மதுவிலும்தான் யூரிக் அமிலம் அதிகம். அசைவ உணவின் அளவைக் குறைத்துக்கொள்ள வேண்டும். 
 

பீர் உள்ளிட்ட மதுவை மறந்தால் யூரிக் அமிலம் உடலில் அதிகரிப்பது தடுக்கப்படும்.வெள்ளைச் சர்க்கரையில் தயாரிக்கப்பட்ட இனிப்புகளை தவிர்க்க வேண்டும். 
 

நிறைய தண்ணீர் குடிப்பது நல்லது. உடல் பருமன் உள்ளவர்கள் எடையைக் குறைத்தாலே யூரிக் அமிலப் பிரச்சினையும் சரியாகிவிடும்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in