Published on : 11 Mar 2025 18:11 pm
சர்க்கரை நோய் நமக்குத் தரும் ஆரோக்கிய நெருக்கடிகள் கொஞ்சநஞ்சமல்ல. இந்த எச்சரிக்கைகள் தொடர்ந்து முன்வைக்கப்பட்டாலும் நாம்தான் இன்னும் விழித்துக்கொள்ளவில்லை.
பரம்பரையில் சர்க்கரை நோய் உள்ளவர்கள், உடல் பருமன் உள்ளவர்கள், உடற்பயிற்சி இல்லாதவர்கள், 30 வயதுக்கு மேற்பட்டவர்கள் ஆகியோருக்குச் சர்க்கரை நோய் வர சாத்தியம் அதிகம்.
வருடத்துக்கு இரண்டு முறை ரத்தச் சர்க்கரை அளவைப் பரிசோதித்துக்கொள்ள வேண்டும். சர்க்கரை நோய் முகம் காட்டினால், உடனே சிகிச்சையைத் தொடங்கிவிட வேண்டும்.
மற்றவர்களைவிடச் சர்க்கரை நோய் உள்ளவர்களுக்கு மாரடைப்பு ஏற்படும் சாத்தியம் இரண்டு மடங்கு அதிகம்.
வலி இல்லாத மாரடைப்பு சர்க்கரை நோயாளிகள் அனைவருக்கும் வருமா என்று கேட்டால் இல்லை என்பதுதான் பதில்.
கிறுகிறுப்பு, மயக்கம், பாலுறவில் வேகம் குறைவது நரம்பு பாதிப்பைத் தெரிவிக்கும் அறிகுறிகள். இந்த அறிகுறிகள் உள்ளவர்கள்தான் மிகவும் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். | தொகுப்பு: கு.கணேசன்