Is gym training better for heart health? Is walking better?
Is gym training better for heart health? Is walking better?

ஜிம் Vs வாக்கிங் - இதய பாதுகாப்புக்கு எது பெஸ்ட்?

Updated on
2 min read

எடை தூக்குவது, ‘ஜிம்’ பயிற்சிகளை மேற்கொள்வது போன்றவற்றால் உடலில் தசைகள் வலுப்பெறும். உடல் கட்டமைப்பு அழகு பெறும். எலும்பு மூட்டுகள் வலுப்பெறும்.

தொடர்ந்து இந்தப் பயிற்சிகளைச் செய்துவரும்போது, தசைகளில் குளுக்கோஸ் அதிகமாகச் சேமிக்கப்படும். உடலுக்கு அதிக ஆற்றல் கிடைக்கும். சோர்வு இருக்காது.
 

நடைப்பயிற்சி, நீச்சல், சைக்கிள் ஓட்டுதல் போன்ற காற்றலைப் பயிற்சிகளைச் செய்யும்போது இதயத்துடிப்பு அதிகரிக்கும். உடல் பாகங்களுக்கு அதிக ரத்தம் செல்லும்.

ஆக்ஸிஜன் எல்லா உறுப்புகளுக்கும் அதிகமாகக் கிடைக்கும். உறுப்புகள் எல்லாமே சுறுசுறுப்படைந்து அதிகத் திறனுடன் இயங்கும். குறிப்பாக, இதயம் சீராக இயங்கும்.

ரத்த அழுத்தம் கட்டுப்படும். கொலஸ்ட்ரால் அளவு கட்டுப்படும். சுவாசம் அதிகரிக்கும். நுரையீரலின் காற்றுக் கொள்ளளவு அதிகரிக்கும். சுவாசத் திறன் மேம்படும். 

மொத்தத்தில் இதயத்துக்கு மட்டுமல்லாமல் காற்றலைப் பயிற்சிகளால் உடலின் ஒட்டுமொத்த ஆரோக்கியமும் மேம்படும். 
 

தினமும் ‘ஜிம்’ பயிற்சிகளை மேற்கொள்பவர்கள் நடைப்பயிற்சிக்கும் நேரம் ஒதுக்க வேண்டும். அப்போதுதான் அவர்களுக்கு இதயப் பாதுகாப்பு கிடைக்கும். 
 

அதேவேளை, ‘ஜிம்’ பயிற்சிகளை மேற்கொள்வதற்கு முன்னால் ஒருமுறை மருத்துவ ஆலோசனை பெற்றுக்கொள்ள வேண்டியதும் அவசியம். 
 

இதயத்தில் பிரச்சினை இருந்து அவை வெளியே தெரியாமல் இருக்குமானால், ‘ஜிம்’ பயிற்சிகளை மேற்கொள்வது ஆபத்தாகிவிடும். ஆகவேதான், இந்த எச்சரிக்கை.  | தொகுப்பு: கு.கணேசன்

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in