Mongoose
Mongoose

கீரி, கழுகுகளை பாம்பின் விஷம் பாதிக்காதது ஏன்?

Updated on
2 min read

கீரியின் தோல் தடிமனானது. அத்துடன் நிறைய முடியும் இருக்கும். பெரும்பாலும் பாம்பின் கடி படாதபடிதான் கீரி தாக்குதலை மேற்கொள்ளும். 

ஒருவேளை பாம்புக் கடித்துவிட்டால், கீரியின் உடலிலுள்ள நிகோடினிக் அசிட்டைல்கோலின் (Nicotinic acetylcholine receptors) என்கிற எதிர்ப்பாற்றல் விஷத்தை முறியடித்துவிடும்.

அதனால் பாம்புடன் கீரி கடுமையாகச் சண்டை போட்டாலும் அதற்குப் பாதிப்பு இல்லை.

அதேபோல், கழுகுக்குப் பாம்பின் விஷத்தை முறிக்கக்கூடிய எதிர்ப்பாற்றல் கிடையாது. ஆனாலும் வேகமாகச் செயல்படுவதால் பாம்பின் கடியிலிருந்து தப்பிவிடுகிறது.

இமைக்கும் நேரத்தில் பாம்பைத் தூக்கிக்கொண்டு உயரத்துக்குச் சென்றுவிடும். பிறகு திடீரென்று பாம்பைப் பாறை மீது வீசும். இறுதியில் பாம்பைக் கொன்றுவிடும்.
 

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in