Published on : 15 Feb 2025 18:41 pm
தங்க நிற ஆடையில் தங்க கிரீடத்துடன் காசி திருத்தலத்தில் அருள்பாலிக்கும் அன்னபூரணியை தரிசிக்க, தினந்தோறும் எண்ணற்ற பக்தர்கள் வருகை புரிகின்றனர்.
வற்றாத உணவை அளிக்கும் அட்சயப் பாத்திரத்தை ஏந்தி இருப்பதால் சக்தி தேவி ‘அன்னபூரணி’ என்று போற்றப்படுகிறாள்.
அன்னபூரணி கோயிலில் காலை 11 மணி முதல் அனைவருக்கும் அன்னதானம் அளிக்கப்படுகிறது.
அன்னபூரணியின் அருளால் வற்றாத செல்வத்துக்கு அதிபதியானான் தனஞ்செயன். அவன் எழுப்பிய கோயில்தான் அன்னபூரணி கோயில்.
அன்னபூரணியை வழிபடும் போது, அட்சய பாத்திரத்தையும் கண் குளிரப் பார்த்து வழிபடுங்கள். உங்கள் செல்வம் அட்சயமாக வளரும்.| தகவல்கள்: கே.சுந்தரராமன்