Published on : 13 Feb 2025 18:34 pm
ஒய்வெடுத்து சரியாகிவிட்டால் பிரச்சினை இல்லை. ஆனால் அடிக்கடி தாங்க முடியாத அளவில் தலைவலியை சந்தித்தால், அதை சாதாரணமாக எடுத்துக் கொள்ளக்கூடாது.
ஒருவருக்கு தலைவலி பல காரணங்களால் ஏற்படலாம். அதில் மன அழுத்தம், மோசமான தூக்கம், நீரிழப்பு, குறிப்பிட்ட மருந்துகள் போன்றவை குறிப்பிடத்தக்கவை.
உடலில் இரத்த அழுத்த அளவானது சீராக இல்லாவிட்டால், அடிக்கடி தலைவலியை சந்திக்க நேரிடும். எனவே இரத்த அழுத்தத்தை பரிசோதிக்க வேண்டும்.
மன அழுத்தத்தில் இருந்தாலும், நிம்மதியான தூக்கத்தைப் பெற முடியாமல் கடுமையான தலைவலியை அவ்வப்போது சந்திக்க நேரிடலாம்.
அஜீரண கோளாறு தீவிரமாக இருந்தாலும், அதன் விளைவாக அடிக்கடி தலைவலியால் அவதிப்படக்கூடும். எனவே செரிமான பிரச்சனையும் ஒரு முதன்மையான காரணம்.
கண்களின் பார்வை பலவீனமாகவோ அல்லது மோசமாகவோ இருந்தால், அது தலையில் உள்ள நரம்புகளில் அழுத்தத்தை ஏற்படுத்தும்.
கிட்ட, தூரப்பார்வை பிரச்சினை இருந்தாலும், அடிக்கடி மிதமான தலைவலி வரும். இந்நிலையில் உடனே கண்களை பரிசோதனை செய்வது நல்லது.
முக்கியமாக அடிக்கடி காரணமில்லாமல் தலைவலியை சந்தித்தால், அதற்கு மூளையில் உள்ள கட்டியும் காரணமாக இருக்கலாம்.
எனவே தலைவலியை சாதாரணமாக எடுத்துக் கொள்ளாமல், உடனே மருத்துவரை அணுகி அதற்கான காரணத்தை அறிந்து, உடனே சிகிச்சை மேற்கொள்ளுங்கள். | கைடன்ஸ்: மருத்துவர் கு.கணேசன்.