mental health issue explained
mental health issue explained

மனநல பாதிப்பு - தனி மனித பிரச்சினையா?

Updated on
2 min read

வளரிளம் பருவத்தில் மன உறுதியை மேம்படுத்திக்கொள்ள வேண்டியது அவசியம். அதுகுறித்த சிலவற்றைப் பார்க்கலாம். 

மனநல ஆரோக்கியத்தை நோக்கிய பயணத்தில் மனநலம் என்றால் என்ன என்பதில் தொடங்கி மனநலப் பிரச்சினைகளுக்கான காரணிகளைத் தெரிந்துகொள்ளுதல் நல்லது.
 

மனநலம் என்பது தனி மனிதன், குடும்பம், சமூகக் கட்டமைப்புக் காரணிகளின் தொடர்புகளால் தீர்மானிக்கப்படுகிறது.
 

சமூகத்தில் நிலவும் பாலினச் சமத்துவமின்மை, சாதிய ஏற்றத் தாழ்வுகள் உள்ளிட் கட்டமைப்புகளும் ஒருவரின் மன ஆரோக்கியத்தில் தாக்கத்தை ஏற்படுத்துகின்றன.
 

அடிப்படைத் தேவைகள் மன ஆரோக்கியத்திற்கு முக்கியமானது. அரசின் சமூக - பொருளாதார கொள்கைகளும் மனிதர்களின் மனநலத்தைத் தீர்மானிக்கின்றன.

எனவே, ஒருவரது வாழ்க்கையில் ஏற்படும் வெற்றி தோல்விகளுக்கு அவர் மட்டுமே காரணம் என்கிற பிம்பம் முதலில் உடைக்கப்பட வேண்டும். 
 

சில மனநல அறிகுறிகள் குறிப்பிடத்தக்க தீவிரத்துடன் அன்றாட செயல்பாடுகளை முடக்குமளவில் இருந்தால் அவருக்கு மன நோய் இருப்பதாகப் புரிந்துகொள்ளலாம்.
 

சிலவகை மன நோய்களை மனநோயாக வகைப்படுத்தும் அளவுக்கு அவை இல்லா விட்டாலும்கூடப் பாதிக்கப்பட்ட நபரால் மட்டுமே இதைச் சரிசெய்ய இயலாது.

கூடவே, மனநல மருத்துவ நிபுணர்களின் உதவி தேவைப்படும். அவர்களிடம் ஆலோசனைகளைக் கட்டாயம் பெற வேண்டும். | தொகுப்பு: டாக்டர் கார்த்திக் தெய்வநாயகம்

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in