scientist Stephen William Hawking
scientist Stephen William Hawking

விஞ்ஞானி ஸ்டீபன் ஹாக்கிங் யார்?

Updated on
3 min read

ஸ்டீபன் ஹாக்கிங் 1942, ஜனவரி 8 அன்று இங்கிலாந்தில் பிறந்தார். தந்தை ஃபிராங்க் மருத்துவர், தாய் இசபெல்.  

செயின்ட் ஆல்பன்ஸ் பள்ளியில் படித்தார் ஹாக்கிங். ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகத்தில் இயற்பியல் பாடத்தில் இளங்கலை முடித்தார்.

அண்டவியல் குறித்த ஆராய்ச்சியில் ஈடுபாடு அதிகமானது. எனவே முதுகலையை கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகத்தில் பயின்றார் ஹாக்கிங்.  

ஹாக்கிங் தசை சிதைவுக்கு உள்ளானார் . ஒவ்வொரு உறுப்பாகச் சிதைத்து அசையவிடாமல் செய்தது. மருத்துவர்கள் 2 ஆண்டுகள் ஆயுள்காலம் நிர்ணயித்தனர்.

உறுப்புகள் செயலிழந்தாலும் மூளை நன்றாகச் செயல்படுகிறதே என்றாராம் ஹாக்கிங்ஸ். ஹாக்கிங்ஸ் 1966இல் கருந்துளை ஆராய்ச்சியில் முனைவர் பட்டம் பெற்றார்.
 

அண்டவியல் ஆர்வத்தால் பிரபஞ்ச உருவாக்கத்தில் சிறிய துகள்களை ஆராய்ந்தார். பெருவெடிப்புக் கொள்கையை ரோஜர் பென்ரோஸ் உடன் இணைந்து ஆராய்ச்சி செய்தார்.

அதற்காக CERN அணு ஆராய்ச்சிக் கூடத்தை அமைத்தனர். அங்கு விஞ்ஞானிகள் பலரும் இணைந்து ஆராய்ச்சி செய்தனர். CERNஇல் அணுக்களின் பெருவெடிப்பை நிகழ்த்தினர்.

அணுக்களின் ஒட்டுப்பொருள் என்ன என்று கண்டுபிடித்தனர். அது 12 துகள்களின் சேர்க்கை. அதில் 12வது துகளைக் கடவுள் துகள் என்றழைத்தனர். 

ஹாக்கிங் அந்தக் கடவுள் துகளின் ஆபத்தைச் சுட்டிக்காட்டினார். அது அதிக எலெக்ட்ரான் வோல்ட்டில் அதிநிலைத்தன்மை பெற்றால் பிரபஞ்சம் அழியும் என்று எச்சரித்தார்.
 

1970-இல் கருந்துளையிலிருந்து ஒருவித வெப்ப ஆற்றல் வெளியேறுகிறது. அதனால் காலப்போக்கில் கருந்துளைகள் கரைந்து காணாமல் போகும் என்றார். 
 

ஹாக்கிங்கின் இந்தக் கண்டுபிடிப்பைப் பாராட்ட கருந்துளையிலிருந்து வெளிவரும் கதிர்வீச்சிற்கு ‘ஹாக்கிங் கதிர்வீச்சு’ என்று பெயரிட்டனர்.

கருந்துளைப் பற்றி ‘பிளாக் ஹோல்ஸ் அண்டு பேபி யுனிவர்ஸ்’ என்கிற புத்தகத்தை எழுதி உலகப் புகழ்பெற்றார்.

1974-இல் ராயல் கழகத்தின் உறுப்பினரானார். கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகத்தில் கணிதத்தில் லூகாசியன் பேராசிரியர் பொறுப்பில் 30 ஆண்டுகள் இருந்தார்.

வாழ்க்கை எவ்வளவு கடினமாக இருந்தாலும் அதில் வெற்றிக்கான வழியும் இருக்கிறது என வாழ்ந்துகாட்டிய ஹாக்கிங், 2018, மார்ச் 14 அன்று 77 வயதில் மறைந்தார். | தொகுப்பு: ஸ்ரீதேவி கண்ணன்

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in