Bad breath
Bad breath

வாய்க்கசப்பு: காரணமும் தீர்வும்!

Updated on
2 min read

வாய்க்கசப்புக்குப் பல காரணங்கள் உள்ளன. சர்க்கரை நோய், புகையிலைப் பயன்பாடு, போதுமான அளவுக்குத் தண்ணீர் குடிக்காதது எனப் பல காரணிகள்.

வாய்க்கசப்புக்கு அடுத்த காரணம், அமில எதிரொழுக்கு நோய் (GERD). இரைப்பையிலிருந்து அமிலம் உணவுக்குழாய் வழியாக வாய்க்கு வரும் நிலைமை இது.

உணவுமுறையையும் கவனிக்க வேண்டும். காரம் மிகுந்த, புளிப்பான உணவை அடிக்கடி சாப்பிட்டால் வாய்க்கசப்பு ஏற்படலாம்.

சில ஹார்மோன்களின் அளவில் மாற்றங்கள் ஏற்பட்டாலும் வாய்க்கசப்பு உண்டாகும்.

கல்லீரலில் சுரக்கப்படும் பித்தநீரில் பிரச்சினை என்றாலும் வாய்க்கசப்பு ஏற்படச் சாத்தியம் உண்டு.
 

தொடர்ந்து எடுத்துக்கொள்ளப்படும் சில மாத்திரை, மருந்துகளும் வாய்க் கசப்பு வருவதற்கான பிரச்சினையைத் தூண்டும். 

வாய்க்கசப்புக்கு வயது மூப்பு, சுவை நரம்பு பாதிப்பு, பல் ஈறு பிரச்சினைகள், மதுப்பழக்கம் என இன்னும் சில காரணங்களும் இருக்கின்றன.

எந்தக் காரணத்தால் வாய்க்கசப்பு ஏற்படுகிறது என்பறிந்து அதற்குரிய சிகிச்சை எடுத்துக் கொண்டால் கட்டுப்படும். | கைடன்ஸ்: மருத்துவர் கு.கணேசன்

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in