Published on : 07 Feb 2025 18:54 pm
நேர மேலாண்மையைச் சரியாகக் கற்றுக்கொண்டால், வாழ்க்கையின் அனைத்துத் துறைகளிலும் வெற்றி பெற முடியும். பயன் அளித்த 10 வழிகளைப் பார்க்கலாம்.
1. எந்தச் செயலைச் செய்வதற்கு முன்பு அதன் அவசியத்தையும் அவசரத்தையும் புரிந்து கொள்ளுங்கள். அவசர அடிப்படையில் செய்யவேண்டிய வேலைகளுக்குத் திட்டமிட ஆரம்பியுங்கள்.
2. ‘காலை திட்டமிடல்’ என்பது மிக முக்கியம். அதாவது காலை எழுந்தவுடன் முதல் வேலையாக முடிக்க வேண்டிய வேலைகளின் பட்டியலைத் தயார் செய்யுங்கள்.
3. ‘மாலை மதிப்பீடு’ என்பது காலை திட்டமிடலின் மிச்சம். அதாவது முடிக்காத வேலையின் பட்டியல். அதில் மிக முக்கியமானதைத் தூக்கி மறு நாளின் முதல் பணியாகச் செய்ய வேண்டும்.
4. நேரத் திருடர்கள் நிறைந்த காலம் இது. தேவையற்ற திட்டமிடாத சந்திப்புகள், கால வரையறை இன்றி அலைபேசியில் நேரம் கழிப்பது போன்றவற்றை தவிர்க்கலாம்.
5. ‘முதல் மணி நேரம் விதி’ என்று ஒன்று இருக்கிறது. அதாவது நாளின் முதல் மணி நேரத்தில் மிக முக்கியமான பணியைச் செய்ய முடிவெடுப்பது.
6. நடைமுறைக்கு ஒவ்வாத திட்டமிடல்களைத் தவிர்ப்பது நல்லது. எது சாத்தியம்? எது முக்கியம்? இந்தப் புரிதல் இருந்தால் போதும்.
7. எந்தச் செயலைச் செய்ய ஆரம்பித்தாலும், ‘நான்கு முறை’ விதியை மனதில் வைத்துக் கொள்ளுங்கள்.
8 ‘திட்டமிடல்’, ‘செயல்படுத்தல்’, ‘சரிபார்த்தல்’, ‘முடித்தல்.’ இப்படிச் செய்வதால் மனம் கவனமாகச் செய்ய ஆயத்தமாகும்.
9. நேர மேலாண்மை என்பது வேலைகளில் மட்டுமல்லாமல், வீட்டின் பொறுப்புகளிலும் கொண்டு வர வேண்டும்.
10. மன அழுத்தம் குறையச் சிறந்த வழி, ‘இரண்டு நிமிட’ விதி . இரண்டு நிமிடத்தில் முடிக்க வேண்டிய முக்கிய வேலை என்று இருந்தால் உடனே செய்துவிடுங்கள். | தகவல்கள்: நஸீமா ரஸாக்