Whistling Dolphins facts
Whistling Dolphins facts

டால்பின்கள் - வியத்தகு குறிப்புகள்

Updated on
2 min read

மனிதர்களிடம் நெருங்கிப் பழகக்கூடிய உயிரினங்களில் ஒன்று ஓங்கில் (டால்பின்). இது கடல்வாழ் பாலூட்டி. திமிங்கிலத்தின் உறவு.

ஒரு வயது நிரம்பிய ஓங்கில்கள் தங்களுக்கெனத் தனித்துவமான ஒலியை உருவாக்கிக் கொள்கின்றன.

ஓர் ஓங்கிலின் ஒலி ‘வீ-ஊ’ என்று இருந்தால், மற்றொன்றின் ஒலி ‘ஊ-வீ’ என்று இருக்கும்.

ஒருபோதும் இரண்டு ஒலிகள் ஒரே மாதிரியாக இருப்பதில்லை. ஓங்கில்களின் இந்தத் தனித்துவமான ஒலிகளைக் கொண்டுதான் ஒன்றை மற்றொன்று புரிந்துகொள்கின்றன.  

தாய் ஓங்கில்கள் குட்டி ஓங்கில்களுக்குத் தகவல் தொடர்பு முறைகளைக் கற்பிக்கும் விதம் சுவாரசியமானது. 

ஓங்கில்களின் பார்வை தண்ணீருக்குக் கீழும் மேலும் நன்றாகவே இருக்கும். ஆனால் தொலைவில் இருக்கும் பொருள்களைப் பார்க்க பார்வைத் திறன் போதாது.
 

உலோகம், பிளாஸ்டிக் பொருள்களை வேறுபடுத்தி அறியும் திறனும் ஓங்கில்களுக்கு உண்டு. சில நேரம் ஓங்கில்களின் உடல் நிலையையும்கூடத் தெரிந்துகொள்கின்றன.

ஒங்கில்களின் மற்றொரு வியக்கத்தக்க திறன், அவை தங்கள் ‘எக்கோலொகேஷன்’ மூலம் பெறும் ’ஒலிப் படங்களை’ மற்ற ஓங்கில்களுடன் பகிர்ந்துகொள்வது.
 

தனக்கு அருகில் ஓங்கில்களோ மனிதர்களோ துன்பத்தில் இருந்தால், அவர்களுக்கு ஆறுதல் அளிக்கும் வகையில் சுற்றிச் சுற்றி வரும்.
 

ஓங்கில்களின் மொழியை இன்னமும் முழுதாகப் புரிந்துகொள்ள முடியவில்லை. அதுகுறித்து ஆராய்ச்சிகள் தொடர்ந்து நடந்துவருகின்றன. | தகவல்கள்: நஸீமா ரஸாக் 
 

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in