Published on : 06 Feb 2025 19:17 pm

மியாவ்... பூனையின் உடல் மொழிகள்!

Published on : 06 Feb 2025 19:17 pm

1 / 10

மென்மையான நடையும் கூர்மையான பார்வையும் கேட்கும்திறனும் கொண்டவை பூனைகள். நுட்பமான மொழியாற்றலைக் கொண்டுள்ளன.

2 / 10

இரவில் மின்னும் கண்கள், நுனி வரை நிமிரும் வால், மென்மையான நடை, விளையாட்டு என இவை ஒவ்வொன்றும் தகவல் பரிமாற்றம்.  
 

3 / 10

உங்கள் பூனை உங்களைப் பார்த்துக் கண் சிமிட்டுகிறதா? அது உங்களிடம், ’நான் உன்னை நேசிக்கிறேன்’ என்று சொல்கிறது!

4 / 10

வாலை நேராக நிமிர்த்திக்கொண்டு வருகிறதா? அது அன்பான வணக்கம். குறுக்காக வாலை ஆட்டுகிறதா? ’மிகவும் சந்தோஷமாக இருக்கிறேன்’ என்று அர்த்தம்.
 

5 / 10

ஜப்பானிய ஆராய்ச்சியாளர்கள், பூனைகளின் 'மியாவ்' ஒலிக்குப் பதினாறுக்கும் மேற்பட்ட வெவ்வேறு அர்த்தங்கள் உள்ளன என்பதைக் கண்டறிந்துள்ளார்கள்.

6 / 10

நாம் கேட்கும் சாதாரண மியாவ் ஒலி, உணவு கேட்கும் வேண்டுகோளாகவோ அன்பின் வெளிப்பாடாகவோ கவலையின் பகிர்வாகவோ இருக்கலாம். 
 

7 / 10

வால் அசைவுகளின் மொழியும் மிகவும் சுவாரசியமானது. நேராக நிமிர்ந்த வால், நட்பு. குறுக்காக அசைந்தாடும் வால், பேரானந்தம். கோபத்தில் புடைத்த வால் எச்சரிக்கை. 
 

8 / 10

பூனைகள் தங்கள் வாசனையைப் பொருள்களில் தேய்க்கும்போது, அந்த வாசனை குறைந்தது மூன்று மாதங்கள் வரை நீடிக்கிறது. 
 

9 / 10

இந்த வாசனை மற்ற பூனைகளுக்கு அந்தப் பகுதியில் எந்தப் பூனை வசிக்கிறது, அது எப்போது அங்கு வந்தது போன்ற பல முக்கியத் தகவல்களை வழங்குகிறது.

10 / 10

வியக்கத்தக்க வகையில் பூனைகள் மனிதர்கள் பேசும் மொழியில் நூறுக்கும் மேற்பட்ட வார்த்தைகளின் பொருள்களைப் புரிந்துகொள்ளும் திறன் கொண்டவை. | தகவல்கள்: நஸீமா ரஸாக்

Recently Added

More From This Category

x