Published on : 05 Feb 2025 18:32 pm

சுவைமிகு ‘சுட்டத் தேங்காய்’ செய்வது எப்படி?

Published on : 05 Feb 2025 18:32 pm

1 / 14

சேலம் மாவட்டத்தில் ஆடி மாதம் முதல் நாளில் கொண்டாடப்படும் ‘தேங்காய் சுடும்’ பண்டிகையில் தயாராகும் ’சுட்ட தேங்காய்’ மருத்துவக் குணங்களில் மேன்மையானது.

2 / 14

சுவையோ சுண்டி இழுக்கும் தன்மையுடையது.  தேங்காய்ப் பண்டிகையின் சாரத்தையும் ஊட்டத்தையும் அனைவரும் எடுத்துக்கொள்ளலாம்.

3 / 14

எப்படித் தயாரிப்பது? - தேங்காயின் மேல் இருக்கும் நாரை நீக்கிவிட்டு, தேங்காயின் கண்களைத் துளைத்து, உள்ளிருக்கும் நீரை வெளியேற்ற வேண்டும்.

4 / 14

பச்சரிசி, அவல், பொட்டுக்கடலை, எள், பாசிப்பயிறு ஆகியவற்றை வாணலியில் வறுத்துக்கொள்ளவும். இவற்றோடு நாட்டுவெல்லம் சேர்த்து மிக்ஸியில் பொடித்துக்கொள்ளவும்.

5 / 14

பொடித்த பொருள்களைத் தேங்காயின் துளைக்குள் செலுத்த வேண்டும்.

6 / 14

பின்னர் தேங்காய்த் தண்ணீரைச் சேர்க்க வேண்டும்.

7 / 14

வேம்பு மர குச்சியைத் தேர்ந்தெடுத்து, ஒரு முனையைக் கூர்மையாகச் சீவி தேங்காயின் துளைக்குள் பொருந்துமாறு செருக வேண்டும்.

8 / 14

நெருப்பில் வாட்டும் போது தேங்காய் கழன்றுவிடாமல் இருக்கும்படி குச்சியை நன்றாகப் பொருத்த வேண்டும்.

9 / 14

உலர்ந்த குச்சிகளைக் கொண்டு, மண் அடுப்பில் தீ மூட்டி தேங்காயைச் சுட வேண்டும்.
 

10 / 14

தேங்காயை வலமும் இடமும் முன்னும் பின்னும் எனச் சுழற்றிச் சுழற்றி தீயில் வாட்ட, தேங்காயின் முழுப் பகுதியும் நன்றாக வேகத் தொடங்கும்.
 

11 / 14

தேங்காய் வெந்ததும் நெருப்பிலிருந்து எடுத்த சுட்ட தேங்காயை நன்றாக ஆற வைத்து, சுத்தியல் கொண்டு ஒட்டைத் தட்டி திறக்க வேண்டும்.

12 / 14

உள்ளே சேர்த்த உணவுப் பொருள்களின் கலவை தேங்காயோடு சேர்த்து வெந்து சிறப்பானஉணவுப் பண்டமாக மாறியிருக்கும். வாசனையோ கமகமக்கும்!
 

13 / 14

பயன்கள்: எள், நாட்டு வெல்லம், அவல் இவை இரும்புச் சத்தை வாரிவழங்கும். பொட்டுக் கடலையும் பாசிப்பயிறும் புரதத் தேவைக்குத் துணை நிற்கும்.

14 / 14

பல்வேறு நோய்களையும் குறிப்பாக, வாய்ப் புண், வயிற்றுப் புண்களைப் போக்கும் சக்தியும் சுட்ட தேங்காய்க்கு உண்டு. | தகவல்கள்: டாக்டர் வி.விக்ரம்குமார்
 

Recently Added

More From This Category

x