Polycystic Ovarian Disease
Polycystic Ovarian Disease

PCOD பிரச்சினை - தீர்வுக்கு வழிகள்!

Updated on
2 min read

உடல் பருமன்தான் சினைப்பை நீர்க்கட்டிக்கு ஊற்றுக்கண். உடல் பருமன் உள்ளவர்களுக்கு ஆன்ட்ரோஜென் ஹார்மோன் அளவோடு சுரந்தால் ஆபத்தில்லை.

ஆன்ட்ரோஜென் ஹார்மோன் அளவில்லாமல் சுரக்கும்போது நீர்க்கட்டி பிரச்சினை தூண்டப்படுகிறது. 

பெண்களுக்குச் சினைப்பையைச் சுற்றித் தேனடைபோல் ஆயிரக்கணக்கான சினைமுட்டைகள் முதிர்ச்சி அடையாமல் இருக்கும். இவற்றில் சில அவ்வப்போது நீர்க்கட்டிகளாகத் தோன்றி மறையும். 

நீர்க்கட்டிகள் 12க்கும் மேல் இருந்தால், அதை நீர்க்கட்டி என்கிறோம். இந்தக் கட்டிகள் இன்னும் அதிகமாக ஆன்ட்ரோஜெனைச் சுரக்கிறது.

ஆன்ட்ரோஜென் சுரப்பால் பெண்களுக்கு ஆண் தன்மை அதிகரிப்பதோடு, முகத்திலும் உடலிலும் முடிகள் முளைக்கின்றன.

அதேநேரம் தலைமுடி உதிர்கிறது. முகப்பரு தொல்லை தருகிறது. மாதவிடாய் தள்ளிப்போகிறது. 
 

உடல்பருமனைச் சரிசெய்வதுதான் நீர்க்கட்டி சிகிச்சையில் முதல் கட்டம்; முக்கியமான கட்டமும்கூட. இதற்கு அரிசி உணவைக் குறைக்க வேண்டும்.

உடற்பயிற்சிகளைக் கூட்ட வேண்டும். நடைப்பயிற்சி நல்லது. நீச்சலடிப்பதும் சைக்கிள் ஓட்டுவதும் சினைப்பைக்குத் தோள் கொடுக்கும். யோகாவும் உதவும்.
 

ஹார்மோன் மாத்திரைகள் கொடுத்துச் சீராகச் சினைமுட்டை பிறக்கச் செய்வது சிகிச்சையின் அடுத்த கட்டம்.
 

ஹார்மோன் சிகிச்சையில் மாதவிடாய் சீராகவில்லை என்றால், அடுத்தது அறுவை சிகிச்சைதான். 

அறுவை சிகிச்சையில் சினைப்பையைச் சுற்றியுள்ள நீர்க்கட்டிகளை அகற்றுகிறார்கள். இப்படி, ஆன்ட்ரோஜென் சுரப்புக்குக் கடிவாளம் போடுகிறார்கள். | கைடன்ஸ்: மருத்துவர் கு.கணேசன்
 

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in