Coriander seed
Coriander seed

மல்லி விதை மகிமை!

Updated on
2 min read

சளி, இருமல், ஒற்றைத் தலைவலி, ரத்தக் கொதிப்பு, நீரிழிவு, பித்தக் கிறுகிறுப்பு, சிறுநீரகப் பாதை நோய்கள் உள்ளிட்ட பல நோய்களைத் தீர்ப்பதற்கு மல்லி விதை உதவும்.

மல்லி வயிற்று வாயுவை அகற்றும் பணியைச் சிறப்பாகச் செய்யக்கூடியது. உணவு எதுக்களித்தல், செரிமானம் இல்லாமை போன்றவற்றுக்கு சிறந்த மருந்து.

Irritable Bowel Syndrome என்னும் கழிச்சல் நோய்க்கு ஓமமும் கொத்துமல்லியும் சேர்ந்த மருந்து குணம் தரும். வயிற்றுப் புண்ணை ஆற்றுவதற்கும் மல்லி விதையைச் சேர்க்கலாம்.
 

மல்லி விதை நீரிழிவு நோயைக் கட்டுப் படுத்துவதிலும் நல்ல கொழுப்பைக் கூட்டுவதிலும் பயன் தரும். 

கரப்பான், காளான் படை முதலான தோல் நோய்களுக்கும் மல்லி விதை எண்ணெய் தீர்வளிக்கிறது.
 

மல்லி, சுக்கு சேர்த்து தேநீர் செய்து அருந்தினால் வயோதிகத்தில் ஏற்படும் மலச்சிக்கலை நீக்கலாம். இது குடலின் தசை இயக்கத்தைத் தூண்டி மலச்சிக்கலைத் தணிக்கிறது.

சுக்கு, தனியா, பனைவெல்லம் சேர்ந்த கஷாயத்தை வாரம் ஒரு முறை குடிப்பது அஜீரணம் ஏற்படாதிருக்க உதவும்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in