wheezing problem
wheezing problem

வீசிங் - குணப்படுத்த முடியுமா?

Updated on
2 min read

‘வீசிங்'கைக் குணப்படுத்த முடியாதா? குறைந்தபட்சம் குழந்தையாவது இதிலிருந்து மீள வழி உண்டா? என்பதே பெற்றோர்களின் முக்கிய கேள்வி. இதுகுறித்து பார்க்கலாம்.

ஆஸ்துமா பரம்பரையாக வரும் பாதிப்புதான். ஆனால், அப்படி வரவேண்டுமெனக் கட்டாயம் இல்லை. 
 

சுற்றுச்சூழல் மாசு, ஒவ்வாமை ஆகிய இரண்டும் அடுத்த காரணங்கள். ஒவ்வாமையில் சைனஸ் ஒவ்வாமையும் உணவு ஒவ்வாமையும்தான் முதன்மைக் காரணங்களாக இருக்கும்.

குழந்தைகளுக்குப் பெரும்பாலும் பசும்பாலில் உள்ள புரதம் ஒவ்வாமையை ஏற்படுத்தும். இரைப்பையில்  புண் உண்டாக்கும். இதனால் ஆஸ்துமா பாதிப்பு ஏற்படும்.

ஆஸ்துமாவுக்கு என்ன காரணம் எனக் கண்டறிந்து மருந்துகள் கொடுத்து, அதோடு ஆஸ்துமாவுக்கான மருந்துகளையும் எடுத்துக்கொள்ளச் சொல்லுங்கள், பிரச்சினை கட்டுப்படும். 
 

அம்மா எடுத்துக்கொள்ளும் இன்ஹேலர் மருந்துகளைக் குழந்தைகளுக்குப் பயன்படுத்தக் கூடாது.
 

வயதுக்கு ஏற்ப மருந்தின் அளவும் மாறும். இன்ஹேலர் மருந்தைத் தேர்வு செய்ய மருத்துவர் ஆலோசனை தேவை. | தகவல்: கு.கணேசன்

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in