Maida Parotta good or bad?
Maida Parotta good or bad?

மைதா பரோட்டா நல்லதா, கெட்டதா?

Updated on
2 min read

தமிழகத்தில் அங்கிங்கெனாதபடி நிறைந்திருப்போர் பரோட்டா பிரியர்கள். உணவகங்கள், சாலையோரக் கடைகளில் இரவில் அதிகம் ருசிக்கப்படுவது மைதா பரோட்டாதான்.

கோதுமையை பல நிலைகளில் கழுவி வெந்நீரில் ஊறவைத்து, பிறகு குளிர்வித்து சலித்து பிறகு 16 அரவைகளில் இட்டு மைதாவைப் பிரிப்பார்கள்.

கோதுமையை மாவாக அரைத்தால் மஞ்சள் நிறத்துடன் இருக்கும். அந்த மஞ்சள் நிறம் மாறி தூய வெண்மையாக அத்துடன் பென்சாயில் பெராக்சைடு என்ற ரசாயனத்தைக் கலக்கிறார்கள். 

பென்சாயில் பெராக்சைடு ரசாயனம் அளவுக்கு அதிகமாக உடலில் சேர்ந்தால் நீரிழிவு ஏற்படும். மைதா மாவு மிருதுவாக இருக்க அலாக்சன் என்ற ரசாயனத்தைக் கலக்கிறார்கள். 

மைதாவில் குளோரின் டை-ஆக்சைடு, பொட்டாசியம் புரோமைடு, அம்மோனியம் கார்பனேட், சுண்ணாம்பு, சார்பிடன் மோனோ சாச்சுரைட் ஆகியவை கலக்கப்படுகின்றன. 

நிறம், சுவை, நெகிழ்வுத் தன்மை, மிருதுவாக இருக்கவும், வாசனையூட்டவும், நீண்ட நாட்களுக்குக் கெடாமலிருக்கவும்தான் ரசாயனங்கள் சேர்க்கப்படுகின்றன. 

மைதாவில்  78% அளவில் கார்போஹைட்ரேட் உள்ளது என்பதும், மைதாவில் வைட்டமின் அறவே கிடையாது என்பதும் கவனிக்க வேண்டிய விஷயம்.

மரவள்ளிக் கிழங்கிலில் இந்தும் மைதா தயாரிக்கப்படுகிறது. இதில், சர்க்கரைச் சத்தைக் கொண்ட 100 சதவீத ஸ்டார்ச் எனப்படும் கார்போஹைட்ரேட் மட்டுமே உள்ளது.

மைதா என்பது முளை நீக்கப்பட்ட, நார்ச்சத்தும் இல்லாத மிருதுவான பொருள் என்பதால் சத்துக் குறைவாகிறது. மைதாவை பசை காய்ச்சவும் பயன்படுத்துவர். 

நார்ச்சத்து, வைட்டமின், புரதம் போன்ற எதுவுமே மைதாவில் செய்யப்படும் பரோட்டாவை உட்கொண்டால் எளிதில் ஜீரணமாகாது.

பரோட்டா அதிகம் சாப்பிடுவதால் உயர் ரத்த அழுத்தம், உடல் பருமன், நீரிழிவு நோய், சிறுநீரகக் கல் உள்ளிட்ட பல பாதிப்புக்கு வித்திடப்படும் என்றும் எச்சரிக்கிறார்கள். 

மளிகைக் கடைகளுக்குள் இரவில் பிற பொருட்களை ருசி பார்க்கும் பெருச்சாளிகள் மைதா மாவைத் தொடவே தொடாதாம். ஆனால், நாம்?

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in