What is the color of the sun?
What is the color of the sun?

சூரியனின் நிறம் என்ன?

Updated on
3 min read

சூரியனின் நிறம் என்னவென்றால் மஞ்சள் என்போம். ஓவியங்களில் சூரியனை மஞ்சள் நிறத்திலேயே பார்த்து பழகிவிட்டதால் அப்படி கூறுகிறோம். 
 

சூரியனின் உண்மையான நிறம் மஞ்சள் அல்ல.

சூரியனின் நிறத்தை நேரடியாகப் பார்த்துத் தெரிந்துகொள்வது கடினம். சூரியனை வெறும் கண்களால் பார்க்க முடியாது. காரணம், அதன் பிரகாசம். 

சூரியனின் நிறம் குறித்த கேள்விக்கு, பச்சை நிறம் என்று பதிலளித்தார் எலான் மஸ்க். உடனே அவரை இணைய உலகமே கிண்டல் செய்தது. 
 

விஞ்ஞானிகள் சூரியனுக்கும் பச்சை நிறத்துக்கும் தொடர்பு இருக்கிறது என்கின்றனர். இதைத் தெரிய சூரியனின் பண்பை முதலில் அறிவோம்.

சூரியன் வெளியிடும் மின்காந்த அலைகள் சூரியக் கதிர்களாகப் பயணிக்கின்றன. சூரியக் கதிர்களில் அலைநீளங்கள் பல உள்ளன.  
 

கண்ணுறு ஒளிக்குக் குறைவான அலைநீளங்களைப் புறஊதா, எக்ஸ், காமா கதிர்கள் என வகைப்படுத்துகிறோம். இவை சூரிய நிறமாலை..

சூரியனின் அதிகபட்ச ஆற்றல் வெளிப்படும்போது அதன் வெப்பநிலை 5700 கெல்வின். அதிகபட்ச ஆற்றல் வெளியாகும் நேரத்தில்தான் ஒரு பொருளின் நிறத்தை அறியலாம்.

இதன்படி பார்க்கும்போது நட்சத்திரங்கள் பல்வேறு நிலையில் ஆற்றலை வெளிப்படுத்துகின்றன.

குறைந்த ஆற்றலை வெளிப்படுத்தும் குளுமையான நட்சத்திரங்கள் சிவப்பு நிறத்திலும், மிகவும் வெப்பம் வாய்ந்த நட்சத்திரங்கள் நீல நிறத்திலும் காட்சி தருகின்றன. 
 

இடைப்பட்ட நட்சத்திரங்கள் ஆரஞ்சு, மஞ்சள், வெள்ளை நிறங்களில் தோற்றமளிக்கின்றன.

இந்த வகையில் நமது சூரியனும் ஒரு நட்சத்திரம் அல்லவா? சூரியன் அதன் உட்சபட்ச ஆற்றல் நிறமாலையின் கண்ணுறு ஒளியில்தான் வெளிப்படுகிறது. 

சூரியனின் நிறம் பச்சையும் நீலமும் கலந்த நிறம். சூரியனில் இந்த நிறம் வெளிப்படுவதை மனிதக் கண்களால் பார்க்க முடியாது. 
 

பிறகு ஏன் சூரியனை நாம் மஞ்சள் நிறம் என்கிறோம்? இதற்குக் காரணம் பூமியில் உள்ள வளிமண்டலம்.
 

அதிகாலை மாலை சூரியன் சிவப்பு, ஆரஞ்சு நிறத்தில் காட்சியளிக்க காரணம், பல நிறங்கள் அடர்த்தியான வளிமண்டலத்துக்குள் ஊடுருவதால் அவ்வாறு தெரிகிறது. 

சூரியனின் உண்மையான நிறம் என்னவென்றால், அனைத்து நிறங்களும் கலந்தால் தோன்றும் நிறம் வெள்ளை. அதனால் சூரியனும் வெள்ளை நிறம்தான். | தொகுப்பு: நன்மாறன் திருநாவுக்கரசு
 

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in