Published on : 18 Jan 2025 18:44 pm
குளிர்காலங்களில் சிறுநீரகங்களைப் பாதுகாப்பது முக்கியமானது. யூரியாவைப் பிரித்து ரத்தத்தைச் சுத்திகரிப்பது முதன்மைப் பணி.
சிறுநீரகம் ரத்த அழுத்தத்தைச் சரியாக வைத்துக்கொள்வதுடன் ரத்தச் சிவப்பணுக்களின் உற்பத்திக்கு உதவுகிறது.
உடலில் உற்பத்தியாகும் நச்சுப்பொருள்களை நீக்க உதவும் சிறுநீரகங்களுக்குக் குளிர்காலத்தில் கூடுதலான சத்துகள் தேவை.
குளிர்காலத்தில் சிறுநீரகங்களைப் பராமரிப்பதற்கான சத்தான உணவு வகைகள் சிலவற்றைப் பார்க்கலாம்.
பீட்ரூட்: இதிலுள்ள நார்ச்சத்து உணவு செரிமானத்துக்கு உதவுகிறது; உடலில் உள்ள நச்சுப் பொருள்களை நீக்க சிறுநீரகத்திற்கு பீட்ரூட் உதவுகிறது.
சர்க்கரை வள்ளிக்கிழக்கு: சிறுநீரக ஆரோக்கியத்திற்கு உதவுகிறது. இது ரத்த அழுத்தம், ரத்தத்திலுள்ள சர்க்கரை அளவைச் சீர்ப்படுத்துகிறது.
பூண்டு: உடல் ஆரோக்கியத்திற்கும் வலிமை சேர்க்கிறது. ரத்த அழுத்தம், கொழுப்பைச் சீர்செய்து சிறுநீரகங்களைப் பாதுகாக்கிறது.
கீரைகள்: கீரையில் இரும்புச்சத்து, மக்னீசியம் நிறைந்துள்ளன. சிறுநீரகக் கல் பிரச்சினை இருப்பவர்கள் அளவாகச் சாப்பிட வேண்டும்.