Amazon forest explained
Amazon forest explained

அமேசான் காடு: சில வியத்தகு குறிப்புகள்

Updated on
3 min read

அமேசான் உலகின் மிகப் பெரிய காடு. 55 லட்சம் சதுர கிலோ மீட்டர் கொண்ட பெரிய காடு. அதிகம் மழை பொழிவதால் மழைக்காடுகள் என்கிறார்கள். 
 

மழைக் காடுகள்தாம் இயற்கை வள உற்பத்தி, ஆயிரக்கணக்கான தாவரங்கள், உயிரினங்களுக்கு வீடு. ஆக்சிஜனையும் தருகிறது.

பிரேசில், பெரு, கொலம்பியா, ஈக்வடார், பிரெஞ்சு கயானா உள்ளிட்ட ஒன்பது தென்னமெரிக்க நாடுகளில் அமேசான் மழைக்காடு பரந்து விரிந்திருக்கு.
 

அமேசானின் 60 சதவீதம் காடு பிரேசில் எல்லையில் இருக்கு. பிரேசிலில் உள்ள மொத்த நிலப்பரப்பில் பாதியை அமேசான் மழைக்காடுதான்.
 

அமேசான் காட்டுல 25 லட்சம் பூச்சி வகைகள், 2,500 மர வகைகள், 3 ஆயிரம் மீன் வகைகள், 1500 பறவை வகைகள், 425 பாலூட்டி வகைகள் இருக்கின்றன. 

அமேசானில் 500 பழங்குடி இனங்களைச் சேர்ந்த 10 லட்சம் மக்கள் வாழ்கிறார்கள். சில இனங்கள் வெளியுலகத்தோட தொடர்பில் இல்லை.

அமேசான் காடு புவியின் நுரையீரலாகவும் செயல்படுகிறது. உலகின் இரண்டாவது மிக நீளமான ஆறு இங்க இருக்கு. அந்த ஆறு பேரும் அமேசான்.

அமேசான் ஆற்றின் நீளம் 6,760 கிலோமீட்டர் . இது உலக அளவில் 15 சதவீத நன்னீருக்கான ஆதாரமாக உள்ளது.

அமேசான் காட்டுல மழை பெய்யும் போது மழைநீர் தரைக்கு வர 10 நிமிஷம் ஆகும். அந்த அளவுக்கு அடத்தியான மரங்கள் அமேசானில் இருக்கிறது. 

அமேசான் காட்டில் பல வண்ண விஷத் தவளைகள், கறுப்பு சிலந்தி போன்ற சிறப்பான உயிரினங்கள் காணப்படுகின்றன.

20 ஆண்டுகளில் 2000 புதிய உயிரினங்களை கண்டுபிடித்திருக்கிறார்கள். இன்னும் பல உயிரினங்கள் கண்டுபிடிக்கப்படாமல் இருக்கிறது.

மனிதர்கள் மூலமாகவும், இடி, மின்னல்கள் மூலமுகவும் தீ விபத்து எற்பட்டு அமேசான் காடுகள் அழிகின்றன. 70 சதவீத காடழிப்பு ஏற்பட்டிருக்கிறது.
 

அரிய அமேசான் காட்டைப் பாதுகாக்க அரசாங்கங்களும், பெரு நிறுவனங்களும் மனம் வைக்க வேண்டும். | தொகுப்பு: நவீன்

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in