Published on : 11 Jan 2025 19:43 pm
உணவுக்கு முன்பாகவும் உணவுக்குப் பின்பாகவும் மாத்திரைகளைச் சாப்பிடச் சொல்வதற்குக் காரணங்கள் இருக்கின்றன.
சில மாத்திரைகள் சாப்பிடுவதற்கு முன்பாக எடுத்துக்கொள்ளும்போது, விரைவாகச் செயல்பட்டு உடலில் உறிஞ்சப்படும்.
மாத்திரை சாப்பிடுவதன் பலன் அதிகமாகக் கிடைக்கும் என்பதால் சாப்பிடுவதற்கு முன்பாக எடுத்துக் கொள்ளச் சொல்கிறார்கள்.
உணவு அல்லது பானங்களோடு சாப்பிட்டால் சில மாத்திரைகளின் திறன் சற்றுக் குறையும் என்பதாலும் சாப்பிடுவதற்கு முன்பு சாப்பிடச் சொல்கிறார்கள்.
சில மாத்திரைகள் வீரியம் கொண்டவையாக இருக்கும். சாப்பிடுவதற்கு முன்பு எடுத்துக்கொண்டால் வயிற்றில் பாதிப்பை ஏற்படுத்தலாம்.
உணவுக்குப் பிறகு எடுத்துக்கொள்ளும்போது அவற்றின் வீரியம் குறைந்து, பாதிக்காது. எனவே சாப்பிட்ட பிறகு சில மாத்திரைகளை எடுத்துக்கொள்ளச் சொல்கிறார்கள்.
வயிறு புண்ணாகலாம் என்பதற்காக, அதைத் தடுக்கும் விதத்தில் சாப்பிடுவதற்கு முன்பு ஒரு மாத்திரையை எடுத்துக்கொள்ளச் சொல்கிறார்கள்.