Jellyfish
Jellyfish

ஜெல்லி மீனுக்கு கண் உண்டா?

Updated on
2 min read

ஜெல்லி மீன்கள் குழியுடலிகள் என்ற இனத்தைச் சேர்ந்த கடல்வாழ் பிராணி. கடலில் ஆழமான பகுதிகளில் வாழும். 200 வகைகள் உண்டு.

ஜெல்லி மீனின் தலைப்பகுதி குடை வடிவத்தில் இருக்கும். நடுவில் நீளமான தண்டின் ஒரு துளையின் முனையில் வாய் இருக்கும்.

தலைப் பகுதிக்குக் கீழே தொங்கும் உணர்கொம்புகளினால் உணவை வாய்க்கு ஜெல்லி மீன்கள் கொண்டுவருகின்றன. குடைப் பகுதியின் விளிம்பில் ஏராளமான கொடுக்குகள் அமைந்துள்ளன.

ஜெல்லி மீனுக்கென முழுமையான செரிமான, சுவாச, ரத்த ஓட்ட மண்டலங்கள் கிடையாது. காற்றில் அசைந்தபடியே அவை ஆக்சிஜனேற்றம் செய்து கொள்கின்றன.

ஜெல்லி மீனுக்குத் தன் அசைவைக் கட்டுப்படுத்தும் தகவமைப்பு இல்லை. ஆனால், அதன் நீர்நிலை சார்ந்த எலும்புக்கூட்டைக் கொண்டு நீந்த முடியும்.

சிலவகை ஜெல்லி மீன்கள் ஒரு குளிர்சாதனப் பெட்டியின் அளவில்கூட இருக்கும். இன்னும் சில ஜெல்லி மீன்கள் குண்டூசி அளவே இருக்கும்.

சில ஜெல்லி மீன்களுக்கு விஷக் கொடுக்குகள் உண்டு. சிறிய உயிர்களை வேட்டையாடும்போது அதன் விஷக் கொடுக்கால் கொட்டியே அதை இறக்க வைக்கும்.
 

நுண்தாவரங்கள், பிற கடல்வாழ் உயிரிகளின் முட்டைகளையும் சாப்பிடும். சில ஜெல்லி மீன்கள் சக ஜெல்லி மீன்களையே உணவாக உட்கொள்கின்றன.

ஜெல்லி மீன்களுக்கு பார்வைத் திறன் கிடையாது. ஒளியை உணரும் உறுப்புகள் உண்டு. சூரிய ஒளி தண்ணீரின் மேற்பரப்பில் ஒளிர்வதை அவற்றால் உணர முடியும்.

ஜெல்லி மீன்கள் ஒரு ஆண்டுக்குக் குறைவான ஆயுள்காலம் கொண்டவை. சில நாள்களே ஆயுள்காலம் கொண்ட ஜெல்லி மீன்களும் உண்டு. | தொகுப்பு: ஷங்கர்

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in