Published on : 05 Dec 2024 18:50 pm
முறையற்ற தூக்கமானது மாரடைப்பு, பக்கவாதம் ஏற்படுவதற்கான ஆபத்தை அதிகரிப்பதாகச் சமீபத்திய ஆய்வு கூறுகிறது.
‘ஜர்னல் ஆஃப் எபிடமியாலஜி & கம்யூனிட்டி ஹெல்த்’ இதழ் 40 முதல் 79 வயதுக்கு உள்பட்ட 72,000 பேரிடம் பரிசோதனையில் ஈடுபட்டது.
ஆய்வில், ‘8 மணி நேரத் தூக்கத்தை பெற்றாலும் தூங்கி எழும் நேரம் ஒவ்வொரு நாளும் மாறுபட்டால் அந்தத் தூக்கம் முறையற்றதாகிறது.
முறையற்ற உறக்கம் உடல்நலனைப் பாதித்து மாரடைப்பு, பக்கவாதம், இதயச் செயலிழப்பு போன்றவை ஏற்படுவதற்குக் காரணமாக அமைகிறது.
முறையற்ற தூக்கத்திலிருந்து விடுபட உடற்பயிற்சி, நடைப்பயிற்சி, யோகா, மூச்சுப் பயிற்சி போன்றவற்றில் ஏதாவது ஒரு பயிற்சியைப் பின்பற்றலாம்.
ஆரோக்கியமான உணவுப் பழக்கம் மூலம் இரவில் ஏற்படும் தூக்கமின்மை பிரச்சினையிலிருந்து தப்பிக்கலாம்.
உறங்கப் போகும் நேரத்திற்கு முன்னதாக மிதமான சூட்டில் பால் அருந்தி தூங்குவதும் ஆழ்ந்த உறக்கத்திற்கு வழி வகுக்கும். | தொகுப்பு: எல்னாரா