Giraffe
Giraffe

கத்த முடியாத நெட்டை விலங்கு: ஒட்டகச் சிவிங்கி

Updated on
3 min read

உலகின் உயரமான பாலூட்டி விலங்கு ஒட்டகச் சிவிங்கி. ஆப்பிரிக்கப் புல்வெளிகள், காடுகளில் அதிகம் காணப்படுகின்றன.

ஆண் ஒட்டகச் சிவிங்கியின் எடை சராசரியாக 1,400 கிலோ வரை இருக்கும். ஒரு ட்ரக் வண்டியின் எடையளவு அது.
 

ஒட்டகச் சிவிங்கியின் சிறப்பம்சமே அதன் கழுத்துதான். இது ஒன்றரை மீட்டர் முதல் 1.8 மீட்டர் வரை நீண்டு இருக்கும்.

ஒட்டகச் சிவிங்கியின் வாலில் உள்ள ரோமம் மனிதர்களின் தலைமுடியைவிட 10 மடங்கு அடர்த்தியானது.
 

ஒட்டகச் சிவிங்கியின் தோலில் உள்ள திட்டுகள் நமது கைரேகைகளைப் போலவே இருக்கும். ஒன்றுக்கொன்று மாறுபடும்.
 

ஒட்டகச் சிவிங்களில் ஆண், பெண் இரண்டுக்கும் கொம்புகள் உண்டு. ஆனால் பெண் ஒட்டகச் சிவிங்கிகளின் கொம்புகள் சிறியது.  

ஒட்டகச் சிவிங்கிகள் தண்ணீர் பருகும் நேரம்தான் அபாயகரமானது. முன்கால்களை அகலப் பரப்பினால்தான் அவற்றால் கழுத்தைக் குனிய முடியும்.

ஒட்டகச் சிவிங்கிகள் கழுத்தைச் சாய்த்து நீரைப் பருகும்போது அவற்றால் தங்களைத் தாக்கவரும் விலங்குகளைப் பார்க்க முடியாது.

ஒட்டகச் சிவிங்கியின் கர்ப்பக் காலம் 14 முதல் 15 மாதங்கள். ஒரு குட்டியைத்தான் ஒரு நேரத்தில் பிரசவிக்கும்.
 

குட்டிபோடும்போது நின்றுகொண்டேதான் குட்டியைப் பிரசவிக்கும். குட்டி ஆறு அடி உயரத்திலிருந்து தரையில் விழுந்தாலும் காயம் ஏற்படாது.
 

பிறந்து சில மணி நேரங்களில் குட்டிகள் ஓடக்கூடியவை. குட்டிகள் 1.8 மீட்டர் உயரம் இருக்கும். 

ஒரு மணி நேரத்துக்குப் பத்து மைல் தூரத்தை ஒட்டகச் சிவிங்கிகளால் கடக்க முடியும்.
 

ஒட்டகச் சிவிங்கிக்கு அதிக தண்ணீர் தேவையில்லை. ஒரு சில நாட்களுக்கு ஒருமுறைதான் தண்ணீர் குடிக்கும்.  

ஒரு சிங்கத்தையே காலால் தாக்கி கொல்லும் அளவுக்கு வலிமை வாய்ந்தது ஒட்டகச் சிவிங்கி.

ஒட்டகச் சிவிங்குக்கு குரல் நாண் இருந்தாலும் அதனால் சத்தம் போட்டு கத்த முடியாது. | தொகுப்பு: ஷங்கர்

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in