Can we see the sun directly?
Can we see the sun directly?

சூரியனை நேரடியாக பார்க்கலாமா?

Updated on
2 min read

சூரிய ஒளியில் பாதுகாப்பாக நேரத்தை செலவிடுவது மனதுக்கும் உடலுக்கும் நன்மை பயக்கும் என்று ஆராய்ச்சி கூறுகிறது.

ஆனால் கண்களால் நேரடியாக சூரியனை பார்க்க கூடாது. சூரியனை பாதுகாப்பாக பார்ப்பது எப்படி என்பதை தெரிந்துகொள்வோம்.
 

நேரடியாகச் சூரியனைப் பார்க்கக் கூடாது என்பதற்கு முக்கியக் காரணம், சூரிய ஒளியில் ஆபத்தைத் தரக்கூடிய புறஊதாக் கதிர்கள் உள்ளன என்பதுதான். 
 

காலை, மாலை நேர சூரிய ஒளியில் நன்மை தரும் புறஊதாக் கதிர்கள் இருக்கும். அதைப் பார்க்கும்போது பிரச்சனையில்லை.
 

மதிய நேரத்தில் செங்குத்தாக விழும் ஒளிக்கதிர்களில் கெடுதல் செய்யும் புறஊதாக் கதிர்கள் அதிகம். அந்தக் கதிர்களை பார்த்தால் கண்புரை ஏற்பட வாய்ப்பிருக்கிறது.
 

சில நொடிகள் கூட சூரியனை வெறித்து பார்ப்பது பார்வை குறைபாடு மற்றும் குருட்டுத்தன்மையை ஏற்படுத்தும் என்று நிபுணர்கள் ஒப்புக்கொள்கிறார்கள்.
 

காலையில் சூரிய நமஸ்காரம் செய்தால் கண்களுக்குப் பாதிப்பு ஏற்படுவதில்லை. சூரியன் உதித்ததிலிருந்து சுமார் ஒரு மணி நேரத்துக்குள் செய்யுங்கள்.

இளவெயில் வைட்டமின் டி அளவை அதிகரிப்பது, எலும்பு ஆரோக்கியத்தை மேம்படுத்துதல் உள்ளிட்ட பல ஆரோக்கிய நன்மைகள் உள்ளது. | தகவல்கள்: மருத்துவர் கு.கணேசன்
 

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in