It is better to drink buttermilk on an empty stomach... Why?
It is better to drink buttermilk on an empty stomach... Why?

வெறும் வயிற்றில் மோர் குடிப்பது நல்லது... ஏன்?

Updated on
2 min read

காலையில் எழுந்ததும் வெறும் வயிற்றில் மோர் அல்லது நீராகாரம் குடிப்பது உடலுக்கு நல்லது. உடல் குளிர்ச்சியும், தெம்பும் கிட்டும். 

நீங்கள் ஒல்லியாக இருப்பதால் மோர் அருந்துவதுதான் மிக நல்லது. காரணம், மோரில் ஊட்டச்சத்துகள் அதிகம். இதனால்  நல்ல தெம்பு கிடைக்கும்.
 

தயிரில் இருந்து தயாரிக்கப்படும் நீர்ச்சத்து நிறைந்த புரோபயாடிக் உணவுதான் மோர். பாலில் உள்ள எல்லாச் சத்துகளும் மோரிலும் உள்ளன.

இரண்டு வயதுக்கு மேல் எல்லா வயதினருக்கும் எந்த நேரத்திலும் அருந்துவதற்கு ஏற்ற பானம்தான் மோர். இது உடலுக்குக் குளிர்ச்சியைத் தருகிறது.

வாய் வறட்சியைப் போக்குகிறது. வயிற்றுப்போக்கு, வயிற்று எரிச்சல், அல்சர், அஜீரணம் போன்ற பல வயிற்று நோய்களுக்கு மோர் ஓர் அருமருந்து. 
 

காய்ச்சல், சளி இருப்பவர்கள் மோர் குடிக்கக் கூடாது என்று சொல்வார்கள். இது தவறு. மோரில் கலக்கப்படும் தண்ணீர் சுத்தமாக இருந்தால் காய்ச்சல், சளி வராது.
 

சித்த மருத்துவ முறையில் பல மருந்துகள் மோரில் கலந்து கொடுக்கப்படுவது நடைமுறையில் உள்ளது. | கைடன்ஸ்: மருத்துவர் கு.கணேசன்

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in