Steroid Pills - Side Effect Alert Notes
Steroid Pills - Side Effect Alert Notes

ஸ்டீராய்டு மாத்திரை - பக்க விளைவு அலர்ட் குறிப்புகள்

Updated on
2 min read

அலோபதி மருத்துவத்தில் ஸ்டீராய்டு மருந்துகளின் கண்டுபிடிப்பு ஒரு முக்கியமான திருப்புமுனை எனலாம். 
 

அலர்ஜி, ஆஸ்துமா, மூட்டு வலி பாதிப்பு, நரம்பு பிரச்சினை, தன்தடுப்பாற்றல் நோய்க்கு (Auto immune diseases) உடனடி நிவாரணமே ஸ்டீராய்டு. 
 

ஸ்டீராய்டு மருந்துகளில் ஊசி, மாத்திரை, களிம்பு, இன்-ஹேலர், ஸ்பிரே, திரவ மருந்து என பயன்பாட்டில் பல வகை உண்டு. 

ஒருவர் எந்த மருந்தை, எந்த அளவில், எவ்வளவு காலம் எடுத்துக் கொள்கிறார் என்பதைப் பொறுத்தே பக்க விளைவு ஏற்படுவதும், ஏற்படாததும் இருக்கிறது.
 

பெரும்பாலும் வாய்வழி உட்கொள்ளப்படும் ஸ்டீராய்டு மாத்திரைகளால்தான் பக்க விளைவுகள் ஏற்படும்.

பொதுவாக, ஸ்டீராய்டு மாத்திரைகளைக் குறைந்த அளவில், குறைந்த நாட்களுக்கு எடுத்துக்கொண்டால் பக்க விளைவு ஏற்படுவதில்லை. 

ஆஸ்துமா உள்ளவர்களுக்கு ஸ்டீராய்டு கலந்த மாத்திரைகளுக்கு மாற்றாக, ஸ்டீராய்டு இன்ஹேலர் பயன்படுத்தலாம்.

மூக்கில் அலர்ஜி உள்ளவர்களுக்கு மூக்கில் உறிஞ்சக் கூடிய ஸ்டீராய்டு ஸ்பிரே மருந்துகளைப் பயன்படுத்தலாம். 
 

மருத்துவர் பரிந்துரைப்படி ஸ்டீராய்டு மருந்துகளை எடுத்துக்கொள்வதாக இருந்தால், எந்தப் பக்க விளைவும் ஏற்படாது.

எந்த ஓர் அவசரத்திலும் டாக்டரின் பரிந்துரை இல்லாமல் ஸ்டீராய்டு மாத்திரைகளை எடுத்துக் கொள்ளக் கூடாது. | கைடன்ஸ்: மருத்துவர் கு.கணேசன்

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in