Rainy Season: Viral Fever Alert Notes
Rainy Season: Viral Fever Alert Notes

மழைக் காலம்: வைரஸ் காய்ச்சல் ‘அலர்ட்’ குறிப்புகள்

Updated on
2 min read

‘ஃபுளு’ வைரஸ் காய்ச்சல்தான் மழைக் காலத்தில் ஏற்படுகிற பிரதான நோய். காய்ச்சல், தலைவலி, உடல்வலி, கைகால்வலி கடுமையாக இருக்கும். 
 

தும்மல், மூக்கு ஒழுகுதல், சளி, இருமல் தொல்லை கொடுக்கும். எந்த சிறப்புச் சிகிச்சையும் இல்லை. காய்ச்சலைக் குறைக்க ‘பாரசிட்டமால்’ மாத்திரை உதவும். 

தும்மல், மூக்கு ஒழுகுதலை கட்டுப்படுத்த ‘ஹிஸ்டமின் எதிர்ப்பு மருந்துகள்’ பலன் தரும். நோய் எதிர்ப்புச் சக்தி சரியாக இருந்தால், ஒரு வாரத்தில் தானாக சரியாகும்

திரவ உணவுகளை அடிக்கடி தர வேண்டும்.  அடுத்தவர்களுக்கு ஃப்ளு காய்ச்சல் பரவாமலிருக்கச் சுற்றுப்புறத்தைச் சுத்தமாக வைத்துக்கொள்ள வேண்டும். 
 

குழந்தைகளுக்கு வைரஸ் காய்ச்சல் வந்தால், காற்றோட்டமான அறையில் படுக்கவைக்க வேண்டும். பள்ளிக்கு அனுப்பாமல் ஓய்வு எடுக்கச் சொல்ல வேண்டும். 
 

காய்ச்சல் அதிகமாக இருந்தால் சாதாரணத் தண்ணீரில் சுத்தமான துண்டை நனைத்துப் பிழிந்து குழந்தையின் உடல் முழுவதும் விரிக்க வேண்டும். 
 

தடுப்பூசி வேண்டுமெனில் 4 வார இடைவெளியில் 2 ஊசிகள் போடலாம். பெரியவர்கள் ஒருமுறை போட்டால் போதும். | தகவல்: மருத்துவர் கு.கணேசன்

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in