Published on : 19 Sep 2024 18:19 pm

மனநலன் காக்கும் உணவு எது? - ஆய்வு தரும் டிப்ஸ்

Published on : 19 Sep 2024 18:19 pm

1 / 8

பழங்களையும் காய்கறிகளையும் சீரான முறையில் அன்றாட உணவில் சேர்த்துக்கொள்வது மனநலனுக்கும் சிறந்தது என்று சில ஆய்வுகள் தெரிவிக்கின்றன.

2 / 8

கூடுதலான அளவு பழங்கள், காய்கறிகளை உணவில் சேர்ப்பது மனநலனில் கூடுதலாக 8 நாட்கள் நடைப்பயிற்சி செய்த பலனை அளிப்பதாக சொல்கிறது ஆய்வு முடிவு.

3 / 8

தினசரி குறைவான பழங்கள், காய்கறிகள் சாப்பிடுவோரை அதிகம் சாப்பிடுபவர்களின் மனநலன் செறிவாக இருப்பது ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது.  

4 / 8

வால்நட் பருப்புகளைத் தொடர்ந்து சாப்பிட்டு வந்தவர்களிடம் மனச்சோர்வுக்கான அறிகுறிகள் 26% குறைவாக இருப்பதாக கலிஃபோர்னியா பல்கலை. ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.

5 / 8

எந்தப் பருப்பையும் சாப்பிடாதோருடன் ஒப்பிடும்போது பாதாம் போன்ற மற்ற பருப்புகளைச் சாப்பிட்டவர்களிடம் மனச்சோர்வு அறிகுறிகள் 8% குறைவாக இருக்கின்றன.

6 / 8

‘நியூட்ரியன்ட்ஸ்’ இதழில் வெளியான இந்த ஆய்வு, வால்நட் பருப்புகள் உட்கொள்வதால் ஆற்றல், கவனத் திறன்கள் அதிகரிப்பதை உறுதிபடுத்தி இருக்கிறது.
 

7 / 8

இதயம், அறிவாற்றல் ஆரோக்கியத்துக்கும் வால்நட் பருப்புகளுக்கும் இருக்கும் தொடர்பு பற்றி முன்பு ஆராய்ச்சி செய்யப்பட்டுள்ளது.
 

8 / 8

தற்போது, மனச்சோர்வு அறிகுறிகளையும் வால்நட் பருப்புகள் குறைப்பது ஆய்வின் மூலம் கண்டறியப்பட்டுள்ளது. | தொகுப்பு: யாழினி

Recently Added

More From This Category

x