மனிதன் கூட்டமாக வாழ விரும்புவது ஏன்?
Published on : 17 Sep 2024 14:09 pm
1 / 9
மனித இனம் ஒரு சமூக உயிரினம். உயிரினங்கள் கூட்டமாக வாழ்வது பாதுகாப்புக்காகவும் பரஸ்பர உதவிக்காகவும் உருவான ஒரு நடவடிக்கை.
2 / 9
தனியாக இருக்கும்போது இயலாத பல செயல்களை கூட்டமாகச் சேரும்போது செய்ய வசதியாக அமைவதால்தான் மனித இனம் கூட்டமாக வாழ்வதையே விரும்புகிறது.
3 / 9
உயிரினங்களிலேயே பலம் வாய்ந்த யானைகள் கூடக் கூட்டமாக இருப்பதற்கு விரும்புகின்றன என்றால், மனிதர்களைப் பற்றிச் சொல்லவே வேண்டாம்.
4 / 9
மற்றவருடன் தொடர்பு கொள்ளும் உந்துதலே மொழி பிறக்கக் காரணம். பண்பாடு போன்றவை உருவாக காரணம், தனி மனிதன் சமூகமயமாக மாறியதால்தான்.
5 / 9
தனியாக இருக்கும்போது கிடைக்காத பாதுகாப்பு உணர்வும் நிம்மதியும் ‘கூட்டத்தில் ஒருவனாய்' இருக்கும்போது கிடைக்கிறது.
6 / 9
பாதுகாப்பு காரணமாகவே சமூகத்தில் ஒருவனாக அங்கீகரிக்கப்பட வேண்டும் என்கிற உந்துதல் மனிதனுக்கு ஆதி காலம் தொட்டே இருந்து வருகிறது.
7 / 9
சமூகத்தில் ஒருவனாகும் விழைவே சாதி, மதம், இனம், மொழி, தேசம் போன்ற ஏதோ ஒரு குழுவுடன் தன்னை அடையாளப்படுத்திக் கொள்கிறான்.
8 / 9
குழு உறுப்பினர்களின் அங்கீகாரத்தைப் பெற விழைகிறான். அதில் சரி, தவறு என பல விஷயங்களில் பொதுப் புரிதல், உடன்படிக்கை மற்றவர்களோடு ஏற்படுகின்றன.
9 / 9
சமூக அங்கீகாரம் பெறவேண்டும் என்னும் விழைவு , அது கிடைக்காமல் போய்விடுமோ என்கிற பதற்றத்தை உருவாக்குகிறது. | தகவல்கள்: டாக்டர் ஜி.ராமானுஜன்