சிற்றம்மை: சில புரிதல்கள்
Published on : 14 Sep 2024 18:04 pm
1 / 9
சிற்றம்மை (Chicken pox) நோயைத்தான் அம்மை நோய் என்று பொதுவாகக் குறிப்பிடுகிறார்கள். இந்த நோயை ‘வேரிசெல்லா ஜாஸ்டர்’ எனும் வைரஸ் கிருமிகள் ஏற்படுத்துகின்றன.
2 / 9
சிற்றம்மை குழந்தைகளையும் சிறுவர்களையும்தான் அதிகம் பாதிக்கும். என்றாலும், பெரியவர்களையும் அரிதாகப் பாதிக்கலாம்.
3 / 9
சிற்றம்மை பாதிக்கப்பட்டவர்களின் உடலில் தோன்றும் கொப்புளங்கள், மூக்குச் சளி, மூச்சுக் குழல் சளி போன்றவற்றில் வைரஸ் கிருமிகள் இருக்கும். இவை அடுத்தவர்களைத் தொற்றும்.
4 / 9
அம்மைக் கொப்புளங்களில் நீர்கோக்கும்போது, நோயாளியுடன் நெருங்கிப் பழகுபவர்களை இக்கிருமிகள் தொற்றும். நோயாளிகளின் உடை வழியாகவும் பரவ வழியுண்டு.
5 / 9
கிருமிகள் உடலுக்குள் புகுந்த 2 முதல் 3 வாரத்துக்குள் நோயின் அறிகுறிகள் வெளியில் தெரிய ஆரம்பிக்கும். சாதாரண காய்ச்சலோடு ஆரம்பிக்கும். பிறகு உடல்களில் தடிப்புகள் தோன்றும்.
6 / 9
3-ம் நாளில் தடிப்புகள், கொப்புளங்களாக மாறும். அவற்றில் நீர் கோக்கும். 7-ம் நாளில் நீர்க் கொப்புளங்கள் சீழ்க் கொப்புளங்களாக மாறும். அடுத்து நோயின் தீவிரம் மட்டுப்படும்.
7 / 9
கொப்புளங்கள் உடைந்தும் உடையாமலும் சுருங்கி, காய்ந்து, பொக்குகளாக மாறி உடலிலிருந்து மறையும். அந்த இடங்களில் தழும்புகள் தெரியும். அவையும் சில மாதங்களில் மறைந்துவிடும்.
8 / 9
சிற்றம்மைக்கு தற்போது சிகிச்சை உள்ளது. ‘ஏசைக்ளோவிர்’ (Acyclovir) எனும் மருந்து மாத்திரையாகவும், மேற்பூச்சுக் களிம்பாகவும் கிடைக்கிறது. இவற்றை பயன்படுத்தினால் உடனே நோய் கட்டுப்படும்.
9 / 9
சிற்றம்மைக்குத் தடுப்பூசி கர்ப்பிணிகள் போடக் கூடாது. VZIG எனும் தடுப்பூசியைப் போட வேண்டும். அப்போதுதான் கருவில் குழந்தைக்கு சிற்றம்மை ஏற்படாது. | தகவல்: மருத்துவர் கு.கணேசன்