நெஞ்சு எரிச்சல் - தடுப்பு வழிகள் யாவை?
Published on : 14 Sep 2024 16:57 pm
1 / 11
நம் உணவு முறையில் உள்ள சிக்கல் காரணமாக நெஞ்சு எரிச்சல் (Heartburn) பிரச்சினை நாளுக்கு நாள் அதிகரிக்கிறது. தடுக்கும் வழிகள் இதோ...
2 / 11
நேரத்துக்கு, தேவையான அளவுக்குச் சாப்பிடுங்கள். அதிக சூடாக எதையும் சாப்பிடாதீர். நீர்ச்சத்து நிறைந்த காய்கறிகளையும் பழங்களையும் நிறைய சாப்பிடலாம்.
3 / 11
காரம் மிகுந்த, மசாலா கலந்த, எண்ணெயில் பொரித்த, கொழுப்பு நிறைந்த, புளிப்பு ஏறிய உணவுகளைக் குறைப்பீர். வேகவைத்த, ஆவியில் அவித்த உணவு நல்லது.
4 / 11
ஒரே நேரத்தில் வயிறு நிறைய சாப்பிடுவதைவிட அடிக்கடி சிறிது சிறிதாகச் சாப்பிடலாம். அவசரம் அவசரமாகச் சாப்பிடுவது தவறு.
5 / 11
தக்காளி சாஸ், ஆரஞ்சு, எலுமிச்சை, காபி, டீ, சாக்லேட், மென்பானம், நூடுல்ஸ், புரோட்டா, வாயு நிரப்பப்பட்ட பானம் ஆகியவற்றை குறைத்துக் கொள்ளுங்கள்.
6 / 11
உணவைச் சாப்பிட்டதும் இறுக்கமாக அணியப்பட்ட ஆடைகள், பெல்ட் ஆகியவற்றைச் சிறிது தளர்த்திக் கொள்ள வேண்டும்.
7 / 11
உணவைச் சாப்பிட்டபின் குனிந்து வேலை செய்யக்கூடாது; கனமான பொருளைத் தூக்கக் கூடாது; உடற்பயிற்சி செய்யக் கூடாது.
8 / 11
சாப்பிட்டவுடன் படுக்காதீர்கள். குறைந்தது இரண்டு மணி நேரம் கழித்துப் படுக்கச் செல்லுங்கள். இடது புறமாகத் திரும்பிப் படுப்பது நெஞ்செரிச்சலைக் குறைக்கும்.
9 / 11
மருத்துவரின் பரிந்துரை இல்லாமல் வலிநிவாரணி மாத்திரைகளைச் சாப்பிடக் கூடாது. மது அருந்துவது, புகைப் பிடிப்பது, புகையிலை / பான்மசாலா போடுவது கூடாது.
10 / 11
புகையில் உள்ள நிக்கோடின், இரைப்பையில் அமிலச் சுரப்பை அதிகரித்து, உணவுக் குழாயின் தசைக் கதவுகளையும் தளரச் செய்வதால் நெஞ்செரிச்சல் கூடும்.
11 / 11
நீங்கள் பருமன் எனில், உங்களது உடல் எடையைப் பராமரியுங்கள். நெஞ்செரிச்சல் நிரந்தரமாக விடைபெறும். தகவல்: பொதுநல மருத்துவர் கு.கணேசன்