how to prevent heartburn
how to prevent heartburn

நெஞ்சு எரிச்சல் - தடுப்பு வழிகள் யாவை?

Updated on
2 min read

நம் உணவு முறையில் உள்ள சிக்கல் காரணமாக நெஞ்சு எரிச்சல் (Heartburn) பிரச்சினை நாளுக்கு நாள் அதிகரிக்கிறது. தடுக்கும் வழிகள் இதோ...

நேரத்துக்கு, தேவையான அளவுக்குச் சாப்பிடுங்கள். அதிக சூடாக எதையும் சாப்பிடாதீர்.  நீர்ச்சத்து நிறைந்த காய்கறிகளையும் பழங்களையும் நிறைய சாப்பிடலாம். 
 

காரம் மிகுந்த, மசாலா கலந்த, எண்ணெயில் பொரித்த, கொழுப்பு நிறைந்த, புளிப்பு ஏறிய உணவுகளைக் குறைப்பீர்.  வேகவைத்த, ஆவியில் அவித்த உணவு நல்லது. 

ஒரே நேரத்தில் வயிறு நிறைய சாப்பிடுவதைவிட அடிக்கடி சிறிது சிறிதாகச் சாப்பிடலாம்.  அவசரம் அவசரமாகச் சாப்பிடுவது தவறு. 

தக்காளி சாஸ், ஆரஞ்சு, எலுமிச்சை, காபி, டீ, சாக்லேட், மென்பானம், நூடுல்ஸ், புரோட்டா, வாயு நிரப்பப்பட்ட பானம் ஆகியவற்றை குறைத்துக் கொள்ளுங்கள். 

உணவைச் சாப்பிட்டதும் இறுக்கமாக அணியப்பட்ட ஆடைகள், பெல்ட் ஆகியவற்றைச் சிறிது தளர்த்திக் கொள்ள வேண்டும். 

உணவைச் சாப்பிட்டபின் குனிந்து வேலை செய்யக்கூடாது; கனமான பொருளைத் தூக்கக் கூடாது; உடற்பயிற்சி செய்யக் கூடாது. 

சாப்பிட்டவுடன் படுக்காதீர்கள். குறைந்தது இரண்டு மணி நேரம் கழித்துப் படுக்கச் செல்லுங்கள். இடது புறமாகத் திரும்பிப் படுப்பது நெஞ்செரிச்சலைக் குறைக்கும்.

மருத்துவரின் பரிந்துரை இல்லாமல் வலிநிவாரணி மாத்திரைகளைச் சாப்பிடக் கூடாது. மது அருந்துவது, புகைப் பிடிப்பது, புகையிலை / பான்மசாலா போடுவது கூடாது. 

புகையில் உள்ள நிக்கோடின், இரைப்பையில் அமிலச் சுரப்பை அதிகரித்து, உணவுக் குழாயின் தசைக் கதவுகளையும் தளரச் செய்வதால் நெஞ்செரிச்சல் கூடும். 

நீங்கள் பருமன் எனில், உங்களது உடல் எடையைப் பராமரியுங்கள். நெஞ்செரிச்சல் நிரந்தரமாக விடைபெறும். தகவல்: பொதுநல மருத்துவர் கு.கணேசன்

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in