Published on : 11 Sep 2024 16:07 pm

மங்கலான பார்வை ஏன்? - நீரிழிவு நோயாளிகள் கவனிக்..!

Published on : 11 Sep 2024 16:07 pm

1 / 7

ரத்தத்தில் சர்க்கரை அளவு கூடும்போது கண்ணில் உள்ள லென்ஸ் வீக்கமடைந்து பார்வை மங்கலாகத் தெரியும். சர்க்கரை அளவு சரியானதும் மங்கல் சரியாகிவிடும்.

2 / 7

நீரிழிவு நோய் உள்ளவர்களுக்குக் கண் நீர் சுரக்கும் ‘மெய்போமியன்’ சுரப்பி அடைத்துக் கொள்வதால், கண் வறட்சி (டிரை ஐ) உண்டாகி, கண் உறுத்தல் ஏற்படக் கூடும். 

3 / 7

நீரிழிவு நோயாளிகளுக்கு கண்நீர் அழுத்த நோய் (குளுகோமா) வர வாய்ப்புள்ளது. எனவே, ஆண்டுக்கு ஒரு முறை கண்நீர் அழுத்தப் பரிசோதனை அவசியம். 

4 / 7

கண் பார்வை பிரச்சினை வராமல் இருக்க, எப்போதும் சர்க்கரை அளவு, ரத்தக் கொழுப்பு அளவு, ரத்த அழுத்தத்தை கட்டுப்பாட்டில் வைத்துக்கொள்ள வேண்டும்.

5 / 7

வயதானவர்களுக்கு மட்டுமின்றி, நீரிழிவு நோயாளிகள் அனைவருக்கும் கண் புரை பாதிப்பு வருவதற்கு சாத்தியமுள்ளது. இதனால் பார்வை பாதிப்பு ஏற்படும். 

6 / 7

ரத்த சர்க்கரை அளவைத் தொடர்ந்து கட்டுப்பாட்டில் வைப்பதன் மூலம் கண் புரை பாதிப்பு விரைவில் நேராமல் நிச்சயம் கட்டுப்படுத்த முடியும்.

7 / 7

ஆரோக்கியமான வாழ்க்கை முறை மாற்றம் அவசியம். மருத்துவரின் ஆலோசனைப்படி உணவில் கட்டுப்பாடு தேவை. | தகவல்:  டாக்டர் பெ.ரங்கநாதன்

Recently Added

More From This Category

x