Are you following a healthy diet, tips here
Are you following a healthy diet, tips here

உங்கள் உணவுப் பழக்கம் சரியா? - செக் லிஸ்ட்

Updated on
2 min read

நம் தேவைக்கேற்ப உணவின் அளவையும் நேரத்தையும் மாற்றிக் கொண்டுவிட்டோம். அவை என்ன விளைவை ஏற்படுத்தும் என்றும் யோசிப்பதில்லை.
 

முறையற்ற உணவுப் பழக்கத்தால் உடலில் கொழுப்பின் அளவு அதிகரிக்கலாம், ஹார்மோன்களிலும் ஏற்றத்தாழ்வு ஏற்படலாம்.  
 

சிறிய இடைவேளைகளில் குறைவான உணவை எடுத்துக் கொள்வது நல்லது. காலை 6 மணிக்கு காபி (அ)  டீ, 8 மணிக்கு 2 இட்லி (அ) ஒரு தோசை, 10 மணிக்கு சூப்.

மதியம் கீரை, கூட்டு, தயிர் இவற்றுடன் அளவான சாப்பாடு, நான்கு மணிக்கு கொழுப்பு குறைவான நொறுக்குத்தீனி.
 

மாலை ஆறு மணிக்கு ஏதாவது திரவ உணவு. இரவு எட்டு மணிக்கு மிதமான சிற்றுண்டி. இதுதான் சரியான உணவுப் பழக்கம்.
 

சிலர் வாரத்தில் 5 நாட்கள் இப்படிச் சாப்பிட்டுவிட்டு, வார கடைசி நாளில் அளவில்லாமல் ஹோட்டலில் சாப்பிடுவார்கள். இதனால் உடல் எடை குறையாது.
 

சிறு வயதிலேயே பலருக்கு சர்க்கரை நோய் வர, உணவுப் பழக்கமும் ஒரு காரணம். முப்பது வயதைக் கடந்தாலே உணவு பிரமிடைப் பின்பற்ற வேண்டும். 
 

கொழுப்பும் கார்போஹைட்ரேட்டும் நிறைந்த உணவுகளைக் குறைவாகவும், புரதமும், விட்டமின்களும் நிறைந்த உணவுகளை அதிகமாகவும் சாப்பிட வேண்டும்.
 

உடலை உள்ளும் புறமும் சுத்தப்படுத்துவதில் தண்ணீருக்கு முக்கியப் பங்கு உண்டு. தினமும் காலை வெறும் வயிற்றில் தண்ணீர் குடிப்பது நல்லது.
 

சிலருக்கு அடிக்கடி தண்ணீர் குடிக்க முடியாது அல்லது பிடிக்காது. இவர்கள் நீர்மோர், எலுமிச்சை சாறு, தர்பூசணி சாறு போன்றவற்றைக் குடிக்கலாம். 

ஆரோக்கிய வாழ்வுக்கு அடிப்படையே சரிவிகித உணவுதான். இதனால்உடலுக்கும் வருத்தம் இல்லை, பணத்துக்கும் செலவு இல்லை. | தகவல்: டாக்டர் கு.கணேசன்

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in