The strange sleep of animals and fun facts
The strange sleep of animals and fun facts

விலங்குகளின் விநோத தூக்கம்! - குதிரை முதல் கரடி வரை

Updated on
3 min read

ஒரு விலங்கு கிடைக்கும் இடைவெளி நேரங்களில் குட்டித் தூக்கமோ, பாதி விழிப்பு; மீதி ஓய்வு என அரைத் தூக்கத்தையோ விலங்குகள் போடும்.
 

குதிரைகள், வரிக் குதிரைகள் நின்றபடியே தூங்கும் இயல்புடையவை. மூட்டுகளை இறுக்கிக்கொண்டு உடலின் மொத்த எடையைக் கால்களில் சுமக்கும் இயல்பு இவற்றுக்கு உண்டு.

குண்டு உடல் காரணமாகப் பெரும்பாலும் யானை படுத்து தூங்காது. வலுவான மரத்தின் மீது தலை, தும்பிக்கையைச் சாய்த்து குட்டித் தூக்கம் போடுவதையே விரும்பும்.
 

பாம்புகளுக்குக் கண்ணில் இமைகள் இல்லை. அசையாது சுருண்டு அவை குட்டித் தூக்கம் போடும். உறக்கத்தின்போது கண்களிலுள்ள ரெட்டினா பகுதியை சிறிய சவ்வு மூடிக்கொள்ளும்.
 

காண்டாமிருகம் மனிதர்களைப் போலவே தினசரி 8 மணி நேரம் தூங்கும். ஆழ்ந்த உறக்கத்தில்கூட,  சிறு சத்தத்தையும் உணர்ந்து உஷாராகும் இயல்புடையது.
 

மிகவும் வேகமாக ஓடக்கூடிய சிறுத்தை, மரத்தின் உயரமான கிளையிலும் உடலை சாய்த்துத் தூங்கும். அப்படித் தூங்கும்போதும் கிளையிலிருந்து சிறுத்தையின் உடல் சரியாது.

கரடி தினமும் குறைந்தது 15 மணி நேரம் தூக்கத்தில் இருக்கும். விழித்திருக்கும் மிச்ச நேரத்திலும் தூங்குவது போலவே தோற்றமளிக்கும்.
 

பறவைகள் நீண்ட தூரம் பறக்கும்போதும் அவை அரைத் தூக்க நிலையிலேயே ஓய்வெடுக்கின்றன. ஆனால் கீழே விழாமல் பறந்துகொண்டே இருக்கும்.
 

வாத்து கூட்டத்தில் ஓரத்தில் இருப்பவை, குழுவின் பாதுகாப்புக்காக அரைத்தூக்கம் போடும்.  நடுவில் இருப்பவை பாதுகாப்பாக முழுத் தூக்கம் போடும்.


 

வௌவால்கள் சுமார் 20 மணி நேரம் தூங்கும். நள்ளிரவில் மட்டுமே இரைதேடிச் செல்வதால், மற்ற சமயங்களில் தலைகீழாகத் தொங்கியபடி தூங்கிக்கொண்டிருக்கும்.

உயரமான விலங்கான ஒட்டகச்சிவிங்கி அவ்வப்போது 5 அல்லது 10 நிமிடங்களாக தினமும் அதிகபட்சமாக 1 அல்லது 2 மணி நேரம் மட்டுமே தூங்கும்.

விலங்குகளில் கரடியின் குளிர்காலத் தூக்கம் ரொம்ப பிரபலமானது. உணவின்றி சுமார் 8 மாதங்கள் வரை கரடி கும்பகர்ணத் தூக்கம் போடுவதுண்டு. | தொகுப்பு: எஸ்.எஸ்.லெனின்

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in