cashew nuts health tips
cashew nuts health tips

முந்திரிப் பருப்பு யாருக்கு நல்லது? - ஹெல்த் டிப்ஸ்

Updated on
2 min read

முந்திரிப் பருப்பு - கொழுப்பு (43 சதவீதம்) அதிகமுள்ள உணவுப் பொருள் இது. 100 கிராம் முந்திரி 550 கலோரிகளைத் தரவல்லது. இது காலை உணவுக்குச் சமம். 

முந்திரி உடலுக்கு அதிக வலிமையைச் சேர்க்கிறது. தாமிரம், துத்தநாகம், மாங்கனீஸ், மெக்னீசியம் ஆகிய தாதுகள் இதில் மிகுந்துள்ளன.

நார்ச்சத்து, பாஸ்பரஸ், வைட்டமின் பி தொகுதிகள் ஓரளவுக்கு உள்ளன. முந்திரியில் கால்சியம், குரோமியம் மிகவும் குறைந்த அளவில் உள்ளன. 

தினசரி சிறதளவு முந்திரிப் பருப்பைச் சாப்பிட்டு வந்தால், ரத்த அழுத்தம் சீராக இருக்கும்.

முந்திரிப் பருப்பில் தாமிர சத்து இருப்பதால், இதன் மூலம் அடர்த்தியான, கறுப்புக் கூந்தல் வளரும். 

முந்திரிப் பருப்பில் மக்னீசியமும் இருக்கிறது. இது எலும்பு ஆரோக்கியத்துக்கு நல்லது.

தினசரி சரியான அளவில் முந்திரிப் பருப்பை உட்கொண்டால், சிறுநீரகக் கற்களில் 25 சதவீதம் மட்டுப்படும்.

உடல் எடை குறைந்தவர்கள், வளரும் பருவத்தில் உள்ளவர்கள், உடலுக்குக் கொழுப்பு தேவைப்படுவோர் தினமும் 5 முந்திரிப் பருப்புகள் வரை சாப்பிடலாம்.

முந்திரியை தொடர்ந்து அளவுக்கு அதிகமாக சாப்பிட்டால் ரத்தக் கொழுப்பு அதிகரித்து, உடல் பருமன், உயர் ரத்த அழுத்தம், இதய நோய் உள்ளிட்ட பாதிப்பு ஏற்படலாம்.

‘அளவுக்கு மீறினால் அமிர்தமும் நஞ்சு’ என்பதைக் கவனத்தில் கொண்டு, முந்திரியை அளவோடு சாப்பிடுவதே நல்லது. அளவு மீறினால் கொழுப்பு கூடிவிடும்.

இதய நோயாளிகள், ரத்தக் கொழுப்பு மிகுந்தவர்கள், உயர் ரத்த அழுத்தம், உடல் பருமன் கொண்டவர்கள் கண்டிப்பாக முந்திரிப் பருப்பைச் சாப்பிடவே கூடாது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in