Diabetes - Siddha Medicine Notes
Diabetes - Siddha Medicine Notes

நீரிழிவு - சித்த மருத்துவக் குறிப்புகள்

Updated on
3 min read

உலர்ந்த அத்திப் பழத்தை 1 கிராம் அளவு தினமும் இருவேளை தண்ணீருடன் உண்ணலாம்.

5 கிராம் ஆலம்பட்டைப் பொடியை 50 மில்லி லிட்டர் நீரில் கலந்து தினமும் இருவேளை அருந்தலாம் (30 மி.லி. முதல் 60 மி.லி. வரை அருந்தலாம்).

4 முதல் 10 கிராம் ஆவாரம் பூ பொடியைச் சுடு தண்ணீர் சேர்த்து ஒரு பங்காகச் சுருக்கிக் காய்ச்சி அருந்தலாம்.

1-5 கிராம் கடல் அழிஞ்சில் உடன் 4 பங்கு நீர் சேர்த்து ஒரு பங்காகச் சுருக்கிக் காய்ச்சி அருந்தலாம்.

கேழ்வரகுக் கஞ்சி, கேழ்வரகு அடை போன்றவற்றைத் தினசரி உணவில் சேர்த்துக் கொள்ளலாம்.

1 – 3 கோவைக்காய் சாற்றைத் தினமும் குடிக்கலாம்

கடும் தாகத்தைத் தணிக்க சீந்தில் இலை அல்லது தண்டுப் பொடியை சுடு தண்ணீரில் ஊற வைத்துத் தினமும் இருவேளை அருந்தலாம்.

1 கிராம் தேற்றான் விதைப் பொடியைப் பாலுடன் தினமும் இரு வேளை குடிக்கலாம்.

2-4 கிராம் நாவல் கொட்டைப் பொடியை 50 மி.லி. சுடு தண்ணீரில் கலந்து தினமும் இரு வேளை அருந்தலாம்.

1-3 கிராம் நிழலில் உலர்த்திய இளநீரின் பொடியை நீரில் கலந்து தினமும் இரு வேளை அருந்தலாம்.

மணிச்சம்பா அரிசியை அன்றாட உணவாக எடுத்துக் கொள்ளலாம்.

வேகவைத்த மூங்கில் அரிசியை உணவாக எடுத்துக்கொள்ளலாம். இது ரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவைக் குறைக்க உதவுகிறது.

3 கிராம் கருஞ்சீரகப் பொடியை சம அளவு வெந்தயத்துடன் கலந்து தினமும் இரு வேளை உணவுக்கு முன்பாக எடுத்துக் கொள்ளலாம்.

எளிய உடற்பயிற்சி, நடைபயிற்சி, யோகாசனப் பயிற்சிகளைத் தினமும் செய்ய வேண்டும் என்று தேசிய சித்த மருத்துவ நிறுவனம் பரிந்துரைக்கிறது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in