Published on : 15 Dec 2023 17:37 pm

ஜிம் பயிற்சியா, நடைப்பயிற்சியா?

Published on : 15 Dec 2023 17:37 pm

1 / 10

எடை தூக்குவது, ‘ஜிம்’ பயிற்சிகளை மேற்கொள்வதால் உடலில் தசைகள் வலுப்பெறும். உடல் கட்டமைப்பு அழகு பெறும். எலும்புகளின் அடர்த்தி அதிகரிக்கும். எலும்பு மூட்டுகள் வலுப்பெறும்.

2 / 10

தொடர்ந்து ‘ஜிம்’ பயிற்சிகளைச் செய்துவரும்போது, தசைகளில் குளுக்கோஸ் அதிகமாகச் சேமிக்கப்படும். உடலுக்கு அதிக ஆற்றல் கிடைக்கும். சோர்வு இருக்காது.

3 / 10

மாறாக நடைப்பயிற்சி, நீச்சல், சைக்கிள் ஓட்டுதல் போன்ற காற்றலைப் பயிற்சிகளைச் (Aerobic Exercises) செய்யும்போது இதயத்துடிப்பு அதிகரிக்கும்.

4 / 10

காற்றலைப் பயிற்சிகளால் உடல் பாகங்களுக்கு அதிக ரத்தம் செல்லும். அப்போது ஆக்ஸிஜன் எல்லா உறுப்புகளுக்கும் அதிகமாக கிடைக்கும். குறிப்பாக, இதயம் சீராக இயங்கும்.

5 / 10

நடைப்பயிற்சி, நீச்சல், சைக்கிளிங்கால் ரத்த அழுத்தம் கட்டுப்படும். கொலஸ்ட்ரால் அளவு கட்டுப்படும். சுவாசம் அதிகரிக்கும். நுரையீரலின் காற்றுக் கொள்ளளவு கூடும்.

6 / 10

காற்றலைப் பயிற்சிகளால் சுவாசத் திறன் மேம்படும். சிறுநீரகம், நுரையீரல், தோல் போன்றவற்றின் வழியாக உடற்கழிவுகள் விரைவில் அகற்றப்படும்.

7 / 10

ஆக மொத்தத்தில் இதயத்துக்கு மட்டுமல்லாமல் காற்றலைப் பயிற்சிகளால் உடலின் ஒட்டுமொத்த ஆரோக்கியமும் மேம்படும்.

8 / 10

ஆகவே, தினமும் ‘ஜிம்’ பயிற்சிகளை மேற்கொள்பவர்கள் நடைப்பயிற்சிக்கும் நேரம் ஒதுக்க வேண்டும். அப்போதுதான் அவர்களுக்கு இதயப் பாதுகாப்பு கிடைக்கும்.

9 / 10

அதேவேளை, ‘ஜிம்’ பயிற்சிகளை மேற்கொள்வதற்கு முன்னால் ஒருமுறை மருத்துவ ஆலோசனை பெற்றுக்கொள்ள வேண்டியதும் அவசியம்.

10 / 10

இதயத்தில் பிறவியிலேயே ஏதாவது பிரச்சினை இருந்து, அவை வெளியே தெரியாமல் இருக்குமானால், ‘ஜிம்’ பயிற்சிகளை மேற்கொள்வது ஆபத்தாகிவிடும். - பொதுநல மருத்துவர் கு.கணேசன்

Recently Added

More From This Category

x